தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதய கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகள்!

இதய கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகள்!

இதய கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகள்!


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிகரித்த ரத்த கொழுப்பு அளவு ஆகியவையும் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகின்றன.



எந்த உணவுகளால் பாதிப்பு?

உணவுப் பழக்கவழக்கங்கள் ஒருவரின் கொழுப்பின் அளவு, சக்கரை அளவு, ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் உடல் எடையை நேரடியாகப் பாதிக்கின்றன.- இவை அனைத்தும் இதய மாரடைப்பு நோய்க்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

நிறைவுற்ற கொழுப்பு - டிரான்ஸ் பேட்ஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிகப்படியான சோடியம் உள்ள உணவுகள், ரத்தக் குழாய் அடைப்பு, தமனி விறைப்புக்கு காரணமாகின்றன. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் நிறைந்த உணவுகள் நம் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

நிறைவுற்ற கொழுப்புகள்

ரத்த கொழுப்பை அதிகரித்து, தமனியில் கொழுப்பு உருவாவதை வேகப்படுத்துகின்றன. பிஸ்கட், ரஸ்க், பரோட்டா, நுாடுல்ஸ், பப்ஸ், சமோசா போன்ற மைதாசெய்யப்படும் உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.

* அதிகப்படியான சோடியம் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் உள்ளிட்ட உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.

* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், நீரிழிவு நோய், மாரடைப்பு வரும் அபாயத்தை அதிகரிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் வெல்லம், தேன், பனை சர்க்கரை, தேங்காய் சர்க்கரையை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

* சிவப்பு இறைச்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாரத்தில் இரண்டு முறைக்கும் குறைவாகவே அசைவம் சாப்பிட வேண்டும்.

மாறாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன, பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன. மேலும், மீன்களில் இருந்து வரும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்து இதயத் துடிப்பை சீராக்குகின்றன.

இதயத்தை பாதுகாக்கும் உணவு முறைகள்

தாவர உணவுகள், நல்ல கொழுப்பு, பழங்கள், காய்கறிகள், பல்வேறு ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிகள், அதிக அளவில் உள்ளன.

முழு தானியங்கள்: உமி நீக்காத அரிசி, சிறு தானியங்கள் கொழுப்பைக் குறைக்கும் நார்ச்சது அதிகம் கிடைக்கும்.

கொழுப்பு குறைந்த புரதங்கள்

சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விட மீன், குறிப்பாக சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி, தோல் இல்லாத கோழி, பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

* ஆரோக்கியமான கொழுப்புகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்ட ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் பாதாம், கொழுப்பு நீக்கப் பட்ட பால், தயிர் உணவில் சேர்க்கலாம். சர்க்கரை பானங்கள், இனிப்பு வகைகள், உப்பு நிறைந்த சிற்றுண்டிகள், வறுத்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சிகளை முற்றிலும் தவிரப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us