தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கிசுகிசுப்புகளும், முணுமுணுப்புகளும் ஆரம்பநிலை பரிசோதனைக்கான விழிப்புணர்வு

கிசுகிசுப்புகளும், முணுமுணுப்புகளும் ஆரம்பநிலை பரிசோதனைக்கான விழிப்புணர்வு

கிசுகிசுப்புகளும், முணுமுணுப்புகளும் ஆரம்பநிலை பரிசோதனைக்கான விழிப்புணர்வு


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடி, மின்னலை கேட்டிருப்போம்; பார்த்திருப்போம். ஆனால், இதயத்தின் சில லேசான சத்தங்களைக் கேட்டு, நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இவையெல்லாம் நோயின் உண்மையான அறிகுறிகள். பெரும்பாலான நேரங்களில் இவை, உடனடி மரணம் அல்லது மாரடைப்பு என்ற ஆபத்துகளுக்கான முன்னோடி என்பதை உணர்வதே, மாரடைப்போ, மரணமோ வருவதைத் தடுப்பதற்கான ரகசியம்.

இதயத்தின் முணுமுணுப்பை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கொடுப்பதே, அவரையும், குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் காப்பாற்றும் முக்கியமான கடமை.

தானாக முனகி, மூடிக் கொள்வதற்கு முன் இதயம், கிசுகிசுக்கும், முணுமுணுக்கும். இதை அறிந்து கொள்ள நாம் நம்மை எப்படி தயார்படுத்திக் கொள்வது? அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது ஒரு வகை; அதை தவற விட வாய்ப்பு உண்டு. இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனைகளையும் தவற விடுவோம். ஆனால், இப்படி ஒரு விஷயம் உண்டு என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வதே மிக மிக நல்லது.

இனம் புரியாத மாற்றம் நம் உடலில் ஏற்படுவதை, நாம் உணர வேண்டும். 'நேற்று மாடிப்படிகளை லாவகமாக, பிரச்னை ஏதும் இன்றி ஏறினோமே... இன்று லேசாக மூச்சு வாங்குகிறதே...' என்று தோன்றினால், விழித்துக் கொள்ளுங்கள்!

மார்பில் ஏதோ இறுக்கமாக இருப்பது போல தோன்றுகிறதா... அது, 'காஸ்ட்ரைட்டிஸ்' அல்ல... விழித்துக் கொள்ளுங்கள்!

'அந்த பஸ்சைப் பிடிக்க, என்னால் ஓட முடியவில்லையே... ஏதோ என்னை தடுக்கிறதே...' ஏன் எனக்கு அதீதமாக வியர்க்கிறது...' என்றால், விழித்துக் கொள்ளுங்கள். ஏன் என் நெஞ்சு படபடவென அடித்துக் கொள்கிறது... என்று தோன்றுகிறதா... விழித்துக் கொள்ள வேண்டிய சரியான தருணம் இது!

உங்களுக்கு அருகில் யாராவது, மூச்சிரைப்பைக் கட்டுப்படுத்த முயன்று தவிக்கின்றனரா... விவேகத்துடன் வேகமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்ற வேண்டும்!

பள்ளியில் ஏதாவது ஒரு குழந்தை ஓட மறுத்து அல்லது ஓட முடியாமல் முடங்குகிறதா... ஆசிரியர்கள் உடனே, அக்குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் இதயத்தின் முணுமுணுப்பை நீங்களே உணர்ந்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சில குடும்பங்களில், மனைவிமார்களின் அறிவுத் திறனால், அவர்களின் கணவன்மார்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். லேசான அறிகுறி தென்பட்டாலே மருத்துவரிடம் செல்வோர், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். அக்கறையுடன் உங்கள் உடலை கவனியுங்கள். பரிசோதனை, தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு இருந்தால், அது தான் அக்கறையின் மிகச் சிறந்த அடையாளம்

டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ்,

எம்பி, எம்எஸ், எம்சிஎச், எப்ஐஏசிஎஸஅ,

எப்ஆர்சிஎஸ் (எடின்), இதய அறுவை சிகிச்சை நிபுணர்,

தி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us