தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புதிய நம்பிக்கை தரும் கேன்சர் தடுப்பூசி!

புதிய நம்பிக்கை தரும் கேன்சர் தடுப்பூசி!

புதிய நம்பிக்கை தரும் கேன்சர் தடுப்பூசி!

1


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இருந்ததை விடவும், கேன்சர் சிகிச்சைக்கு, தற்போது 100 விதமான மருந்துகள் உள்ளன.

பல மருந்துகள், நம் நாட்டிலேயே தயார் செய்யப்படுவதால், கீமோ தெரபி மருந்து களின் விலை வெகுவாக குறைந்து விட்டது. ‘டோசிடாக்சல்’ என்ற மருந்து 25 ஆண்டுக்கு முன் 15 ஆயிரம் இன்று 1500 ரூபாய். நிணநீர் கட்டிக்கான ஆன்டிபாடி மருந்து 1லட்சத்தி 30 ஆயிரமாக இருந்தது இன்று, 15 ஆயிரம் ரூபாய். ஒரு வருட இம்மியூனோ தெரபி சிகிச்சைக்கான செலவு 15 -– 30 லட்ச ரூபாய் ஆகிறது.

மருந்தின் விலை

எங்கள் மருத்துவ மனையை, 2004ல் ஆரம்பித்த போது, டோடாக்சல் மருந்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் இருந்தது. மருந்து விற்பனையில் எந்த லாபம் நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்து, எங்கள் நோயாளிகளுக்கு 8 1000 ரூபாய்க்கு கொடுத்தோம்.

கேன்சர் செல்கள் எங்கு பரவியுள்ளது என்பதை கண்டறிய பயன்படும் 'பெட்ஸ்கேன்' செய்வதற்கு, கார் பரேட் மருத்துவனைகளில், 35 ஆயிரம் கட்டணமமாக உள்ளது. ஆன்டர்சன் பரிசோதனைக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்து, 11 ஆயிரம் ரூபாயில் நாங்கள் செய்கிறோம்.

ரஷ்ய தடூப்பூசியின் நம்பிக்கை!

கேன்சரக்கான முதல் தடுப்பூசி, ரஷ்ய நாட்டில் உருவாக் கப்பட்டு உள்ளது. மெலனோமா எனப்படும் தீவிர தோல் கேன்சர் பாதித்த, 60 வயது நபருக்கு இத்தடுப் பூசியை செலுத்திப் பார்த்ததில், அவரின் உடலில், புதிய கேன்சர் செல்கள் எதுவும், கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகவில்லை என்பது உறுதி யா கியுள்ளது. வழக்கமான மருந்துகளைப் பன்று கேன்சர் ெசல்களை அழிக்கமல், கேன்சர் செல் களில் உள்ள மரபணு மாற்றத் தகவலை, நோய் எதிர்ப்பு சக்தி அடையாளம் காணும் விதமாக, இத்தடுப்பு மருந்து தயாரிக்கப் பட்டு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியே, கேன்சர் சல்களை அடையாளம் கண்டு அழிக்கிறது. இத்தடுப்பூசி, விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்ரமணியன்,

கேன்சர் மருந்தியல் சிறப்பு மருத்துவர், தலைவர், வி.எஸ்., மருத்துவக் குழுமம், சென்னை.

90211 23000 care@vshospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us