தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேதம் தரும் தீர்வுகள்!

முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேதம் தரும் தீர்வுகள்!

முடி உதிர்வை தடுக்க ஆயுர்வேதம் தரும் தீர்வுகள்!


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ளம் வயதிலேயே முடி உதிர்வு, முடி மெலிதல், இளநரை போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

ஆயுர்வேதத்தில், முடியின் ஆரோக்கியம், தோஷங்கள், தாதுக்கள், அக்னி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வாததோஷம் அதிகரிப்பதால், முடி வறட்சி, உடைதல், உதிர்வு ஏற்படலாம்.

பித்தம் அதிகரிப்பதால், இளநரை, வேர்கால் பலவீனம், கபம் அதிகமாவதால், உச்சந்தலையில் அதிக எண்ணெய் சுரப்பு, பொடுகு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

ஆயுர்வேத மூலிகைகள்

முடி, பராமரிப்பிற்கு நெல்லிக் காய், பிருங்கராஜ், பிரம்மி, செம்பருத்தி எண்ணெய் ஆகியவை பயன்படுகிறது. உச்சந்தலை சுத்தம், பொடுகு பராமரிப்பில், வேம்பு முக்கியமாக உள்ளது. வெட்டிவேர், கரிசாலை, கறிவேப்பிலை போன்ற மூலிகைகளும் கேச பராமரிப்பில் இடம் பெறுகின்றன.

அப்யங்கம் எனப்படும், தலை, உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது, சிரோ அப்யங்கம் என்கிற எண்ணெய் மசாஜ் செய்வது முடி உதிர்வைத் தடுக்க உதவலாம்.

வெதுவெதுப்பான ஆயுர்வேத மூலிகை மருந்து கலந்த எண்ணெயை சொட்டுச் சொட்டாக நெற்றியில் விடும் ஷிரோதாரா ஆயுர்வேத சிகிச்சைகள் செய்யலாம். முடி உதிர்வின் காரணத்திற்கு ஏற்ப, உள் மருந்துகள், எண்ணெய் சிகிச்சைகள், தலைக்கான மூலிகைத் தயாரிப்பு கள், உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும்.

எப்போது மருத்துவரை அணுகலாம் ?

முடி உதிர்வு, தொடர்ந்து பல மாதங்கள் நீடிப்பது, தலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் முடி உதிர்வது, உச்சந்தலையில் அரிப்பு, சிவப்பு புண்கள் போன்ற அறிகுறிகளுடன் முடி உதிர்வு ஏற்பட்டால், மருத்துவரை அணுகலாம் . முடி உதிர்வுக்கு ஒரு எண்ணெய், ஒரு மூலிகை தீர்வாக இருக்காது. காரணத்தைக் கண்டறிந்து உணவு, வாழ்க்கை முறை மாற்றம், உச்சந்தலை பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை என்ற ஒருங்கிணைந்த அணுகு முறையையே ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

டாக்டர் சுதீர் அய்யப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899 sreehareeyam.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us