தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏன் வருகிறது?

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏன் வருகிறது?

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏன் வருகிறது?


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை பிறந்தது முதல், 28 நாட்கள் வரை, ‘பச்சிளங் குழந்தை பருவம்’ என்று அழைக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் தொடர்ந்து வளர்ச்சியடைவதுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்குகிறது. எனவே, இக்காலத்தில் முறையான பராமரிப்பு அளிப்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

குழந்தை பிறந்தவுடன்

செய்ய வேண்டியது...

குழந்தை பிறந்தவு டன் தாயின் மார்புடன் அணைத்து வைக்க வேண்டும். இது குழந்தையின் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கவும், தாய்ப்பால் சுரப்பைத் துாண் டவும் உதவும். உடனடியாக, தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும்.

எத்தனை முறை?

ஒரு நாளைக்கு, 8 – 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை அழும் வரை காத்திருக்காமல், கைகளை வாய்க்கு கொண்டு செல்வது, வாயைத் திறந்து தாயின் மார்பகத்தைத் தேடுவது போன்ற பசி அறிகுறிகளைக் கவனித்து, பால் கொடுக்க வேண்டும்.

பிறந்தவுடன்

எடை குறைவது ஏன்?

கர்ப்பப்பையில் இருக்கும் போது உடலில் சேர்ந்திருந்த அதிகப்படியான நீர், பிறந்த பிறகு சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேறுவதே குழந்தையின் உடல் எடை குறைய காரணம். நிறை மாதத்தில் பிறந்த பச் சிளங்குழந்தைகளின் உடல் எடை, முதல் 7 நாட்களில், 7- --------– 10 சதவீதம் வரையும், குறைமாதத்தில் பிறந்த பச்சிளங் குழந்தைகளின் உடல் எடை, 10 – -15 சதவீதம் வரையும் குறையும். அடுத்த 10- – 14 நாட்களில், பிறந்த போது இருந்த எடை வந்து விடும். பிறந்த போது இருந்த உடல் எடையில், 10 சதவீதத்திற்கு மேல் குறைந்து, குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காமல், ஒரு நாளைக்கு 6 முறைக்கு கீழ் சிறுநீர் கழித்தால், உடனடி யாக மருத்து வரை அணுக வேண்டும்.

முதல் குளியல்...

பிறந்த முதல் 24 மணி நேரத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. 24 மணி நேரம் முதல் தொப்புள்கொடி விழும் வரை, வாரம் 2- – 3 முறை, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் முகம், கழுத்து மற்றும் உடலை, மேலிருந்து கீழாக மெதுவாகத் துடைத்து விடலாம். தொப்புள் கொடியைச் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். தொப்புள்கொடி விழுந்த பிறகு, வாரம் 2 – -3 முறை குளிப்பாட்டினாலே போதுமானது. மென்மையான, வா சனையற்ற, குழந்தைகளுக்கான சோப்பை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

பவுடர் போடலாமா?

குழந்தைகளுக்குப் ப வுடர் போட்டால், பவுடர் துகள்கள் குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசப் பிரச்னையை ஏற்படுத் தலாம். வசம்பு, கண் மை, திருஷ்டி மை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

டயப்பர்

குழந்தையின் வயதுக்கும் எடைக்கும் ஏற்ற மென்மையான ‘டயப்பர்’ பயன்படுத்தலாம். சிறுநீர், மலம் கழித்தவுடன் டயப்பர் மாற்ற வேண்டும். மஸ்லின், பருத்தி துணி டயப்பர் அல்லது ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் டயப் பர்களை பயன்படுத்தலாம்.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏன் வருகிறது?

ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் உடைவதால், மஞ்சள் நிற ‘பிலிரூபின்’ நிறமி அதிகமாக உற்பத்தியாகிறது. குழந்தையின் கல்லீரல் முழுமையாக வளர்ச்சி அடையாததால், பிலிரூபினை விரைவாக வெளியேற்ற முடியாது. இதனால் ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்து, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு இது தற் காலிகமானது. ஆனால், பிறந்த 24 மணி நேரத்திற்குள், குழந்தையின் உள்ளங்கை, பாதங்கள் மஞ்சள் நிறமாக மாறினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆபத்து அறிகுறிகள்?

பால் குடிக்காதது, மூச்சு விடுவ தில் சிரமம், மூச்சிரைப்பு, காய்ச்சல், உடல் குளிர்தல், வலிப்பு, அதிக சோர்வு, மஞ்சள் காமாலை அதிகரித்தல் போன்றவை. உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் தீவிர அறிகுறிகள்.

டாக்டர் மு.ஜெயராஜ்,

குழந்தை நல மருத்துவர், ஜிப்மர் மருத்துவமனை, காரைக்கால், புதுச்சேரி.

87785 33123

jeyaraj.jeeva@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us