தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காய்ச்சலுக்கு ஏற்ற உணவுகள்!

காய்ச்சலுக்கு ஏற்ற உணவுகள்!

காய்ச்சலுக்கு ஏற்ற உணவுகள்!


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பருவமழை துவங்கி உள்ளது. இந்த நிலையில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல், மஞ்சள் காமாலை மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.

காய்ச்சல்

சில நாட்களில் காய்ச்சல் சரியானாலும், உடல் முழுமையாக குணமடைய அதிக நாள் ஆகலாம்.

நோய்த்தொற்று நீங்கி பல வாரங்கள் ஆன பிறகும், சோர்வு, மூட்டு வலி, பசியின்மை, துாக்கமின்மை, பலவீனம், தொடர் இருமல் போன்ற அறிகுறிகள் பலருக்கும் தொடர்கின்றன.அதனால், காய்ச்சல் இல்லாததால், முழுமையாக குணம் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது.

நோய்களைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் நவீன மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், உணவு, அன்றாட பழக்க வழக்கங்கள், ஓய்வு மற்றும் வாழ்க்கை முறை மூலம் உடலை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை, ஆயுர்வேதம் வழங்குகிறது.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில், ஆரோக்கியமான தினசரி வழக்கத்தைப் பின்பற்றுவது; நோய்க்கு பிறகு செரிமானம், உடல் வலிமை மற்றும் உடல் சமநிலை இயல்பாவதற்கு முன், அவசரமாக பழைய வேலைகளுக்கு திரும்புவதை தவிர்த்து, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தொற்று நோய், பெரும்பாலும் பசியை குறைக்கிறது. எனவே, எளிமையான புதிதாக சமைத்த உணவுகளை சாப்பிடும் போது, எளிதாக செரிமானம் ஆகும்; ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலில் சேரும்.

சரியான ஊட்டச்சத்து, துாக்கம், போதிய நீர்ச்சத்து, சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, போதுமான ஓய்வு மற்றும் படிப்படியான உடல் உழைப்பு ஆகியவை, உடல் ஆற்றலை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும். ஒவ்வொருவரின் உடல்நிலை, குணமடையும் விதம் மாறுபடும் என்பதால், அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்காமல், தனிநபருக்கு ஏற்ப இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.

உடல் குணமடைய உதவும் உணவுகள்

பசி குறைவாக இருக்கும்போது, இட்லி, தோசை, உப்புமா மற்றும் கஞ்சி போன்ற எளிதில் செரிக்கக் கூடிய சிறந்த உணவு கள், திசுக்களைப் புதுப்பிக்க உதவும். பருப்பு, பச்சை பயறு, பிற பயறு வகைகள் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

பசியும் செரிமானமும் மேம்படும்போது, முட்டை, மீன், கோழிக்கறியை படிப்படியாக உணவில் சேர்க்கலாம்.

வைட் டமின்கள், தாதுக்களை பெற நன் கு சமைத்த காய்கறிகள், வாழைப்பழம், பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சேர்த்து கொள்ள வேண்டும்.சீரான இடைவெளியில், தண்ணீர், காய்கறி சூப், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை குடிப்பது அவசியம்.

நீர்ச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஓ.ஆர்.எஸ்., கரைசல்கள் உதவியாக இருக்கும். பசி குறைவாக இருந்தால், அதற்கேற்ப குறைந்த அளவு மட்டும் சாப்பி டலாம்.

தொற்று நோய் பாதிப்பிற்கு பின், சோர்வு ஏற்படுவது பொதுவானது என்றாலும், தொடர்ந்து பலவீனம் இருந்தால், அதை குணமடைவதன் ஒரு பகுதி என சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு, துாக்கமின்மை, உள் உறுப்புகளை பாதிக் கும் சிக்கல்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சல், கடுமையான நீர்ச்சத்து குறைபாடு, எந்த திரவத்தையும் குடிக்க முடியாமல் போவது ஆகியவைக்கு மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.

டாக்டர் சுஷ்மிதா, ஆயுர்வேத மருத்துவர்,அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனை,சென்னை. 95666 25848

greams@ayurvaid.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us