தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மார்பகங்களில் ஏற்படும் வலி கேன்சரின் அறிகுறியா?

மார்பகங்களில் ஏற்படும் வலி கேன்சரின் அறிகுறியா?

மார்பகங்களில் ஏற்படும் வலி கேன்சரின் அறிகுறியா?


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ண்களுக்கு, மார்பகத்தில் அடிக்கடி வலி வந்தால், கேன்சராக இருக்குமோ என்ற பயம் இருக்கும்.

20 -– 30 வயதில், மாத விடாய் ஆரம்பிக்கும் முன், மார்பகத்தில் வலி இருக்கும்; மார்பகம் கனமாக இருக்கும். இது இரு மார்பகங்களிலும் இருக்கலாம்; ஒரு பக்க மார்பகத்திலும் வலி இருக்கலாம்.

அதே போன்று, ‘மெனோ பாஸ்’ எனப்படும் மாத விடாய் நிற்பதற்கு முந்தைய, ‘பெரிமெனோபாஸ்’ நிலையிலும், ஒரு பக்க மார்பகத்திலோ அல்லது இரு மார்பகங்களிலுமே அடிக்கடி வலி வரலாம், மார்பகங்கள் கனமாக இருப்பதைப் போன்று உணரலாம். இவை அனைத்தும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள்.

இதற்கும் கேன் சருக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது.

அதே போன்று, கர்ப்ப காலத்திலும், தாய்ப் பால் தரும் போதும் இது போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஒரு சிலருக்கு எந்த காரணமும் இல்லாமல் வலி வரும். உடல் தன்மைக்கு ஏற்ற சரியான உள்ளாடை அணியாமல் இருந்தால், இது போன்று மருத்துவ காரணங்கள் இல்லாமல் வலி வரும்.

அதே போன்று தசைகளில் வலி இருந்தாலும், மார் பகத்தில் வலி இருப்பதைப் போன்று உணரலாம்.

இவற்றிற்கும் கேன்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மார்பக வலி, கேன்சரின் பிரதான அறிகுறி கிடையாது.

மார்பகத்தில் கட்டி, வலி இல்லாமல் வளர்ந்தால் கேன்சராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மார்பக வலியுடன் கட்டி, மார்பக காம்புகளில் ரத்தம், திரவம் வடிவது, புண் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 40 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு, ‘அல்ட்ரா சவுண்டு’ அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு, ‘மேமோகிராம்’ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவுகளில், ‘பைப்ரோ அடினாட்டிக் பிரஸ்ட்’ என்று இருந்தால், ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வலி, கனமான உணர்வு ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு, மருத்துவர் சொல்லும் அறிவுரை களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

டாக்டர் ஆர்.செந்தில் குமார்,

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,

எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை, சென்னை. 89259 19941 drsenthilkumar.r@srmhospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us