தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த சோகையை மேம்படுத்தும் ருசியான ஆயுர்வேத மருந்து!

ரத்த சோகையை மேம்படுத்தும் ருசியான ஆயுர்வேத மருந்து!

ரத்த சோகையை மேம்படுத்தும் ருசியான ஆயுர்வேத மருந்து!


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ ண்பூசணியை ஆயுர்வேத மருத்துவத்தில், ‘கூஷ்மாண்டம்’ என்ற பெயரில் குறிப்பிடுவர். சாம்பல் பூசணி என்றும் ஒரு சில பகுதிகளில் இதை சொல்வதுண்டு.

டி.பி., எனப்படும் காசநோய் பெண்களில் பொதுவாக காணப்படும். வெள்ளைப் படுதல், ரத்த சோகை, சிறுநீர் பாதையில் எரிச்சல் என்று பலவித நோய்களுக்கும், வெண்பூசணி தீர்வாக உள்ளது. காரணம், இதில் புரதம், இரும்பு சத்து, விட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

இதனுடைய சதைப் பகுதி, விதைகள் இரண்டையும், எந்த விதத்தில் உபயோகப்படுத்தினாலும் முழுமையான பலன் தரக் கூடியவை. வெண்பூசணியை சமைத்தும் சாப் பிடலாம்; மருந்தாகவும் எடுக்கலாம்.

இதில் துத்தநாகம் அதிகம் உள்ளதால், ஊட்டச்சத்துக்கள் வேகமாக உடலில் உறிஞ்சப்படும். சதைப் பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி கூட்டாக சமைத்து சாப்பிடலாம்; சதைப் பற்று உள்ள பகுதியை அறுத்து, வடிகட்டி சாறாக குடிக்கலாம்; பூசணி சாறு குடித்தால், உடனடியாக புத்துணர்வு கிடைக்கும்.

பூசணி விதைகளை பச்சையாகவோ, வறுத்தோ, பொடித்தோ அல்லது வேக வைத்து மசித்தோ, எந்த விதத்திலும் உட்கொள்ளலாம். தோலுடனும், தோல் நீக்கியும் சாப்பிடலாம்.

வெளித்தோலை நீக்கிவிட்டால், உள் தோலில், ‘டிரிட்டோபன்’ என்ற ஊட்டச்சத்து நிறைய உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த துாக்கத்தைத் தரும்.

கூஷ்மாண்ட ரசாயனம், லேகியம் என்ற பெயரில் கூட்டு மருந்தாக ஆயுர்வேத மருத்துவத்தில் இதை பயன் படுத்துகிறோம். ஆயுர்வேத மருந்து களிலேயே, அல்வா போன்று மிகவும் ருசியான மருந்து இது தான்.

கூஷ்மாண்ட ரசாயனத்தை, உணவுக்குப் பின், காலை, மாலை இரு வேளை, 5 -– 10 கிராம் குடிப்பதால், ரத்த சோகை படிப்படியாக குறையும்; உடல் ஆரோக்கியம் மேம்படும்.

டாக்டர் எம்.கே.சீனி, துணை இயக்குநர், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை, சென்னை.

89255 88178 ayurday23tn@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us