தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/‘பிடிக்காத’ புகையாலும் பிரச்னைகள் வரும்!

‘பிடிக்காத’ புகையாலும் பிரச்னைகள் வரும்!

‘பிடிக்காத’ புகையாலும் பிரச்னைகள் வரும்!


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

சி கரெட் புகை, புகைப்பவர்களின் நுரை யீரலை மட்டும் பாதிக்கும் விஷயம் இல்லை. அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் களின் நுரையீரலை, இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.

இது தவிர, உடலில் ஒவ்வொரு உறுப்பையும் சேதப்படுத்துகிறது.

புகையிலைப் புகையில் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள், எண்ணற்ற நச்சுக்கள், கேன்சரை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன. சிகரெட்டில் உள்ள பிரதான பொருளான நிக்கோட்டின், அதிக போதையைத் தரக்கூடியது. சிகரெட் பழக்கத்தில் இருந்து, விடுபட விடாமல் செய்வது இது தான்.

சிகரெட் பழக்கம் இல்லாத ஒருவர், ‘பேசிவ் ஸ்மோக்கிங்’ எனப்படும், சிகரெட் பிடிப்பவர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் போது, அதே அளவு ஆபத்து இருக்கிறது என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

‘பேசிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் சிகரெட் பிரியர்கள் விடும் புகையை சுவாசிப்பதால், சிகரெட்டை நேரடியாக புகைப்பவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

சமீபத்தில், சர்வதேச மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, பேசிவ் ஸ்மோக்கர்ஸ் இடையே உயிரிழப்புகள் 50 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறுகிறது.

சிகரெட் புகையை சுவாசிப்பதால், உடலில் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுகிறது.

இதயம்

மற்றவர்கள் வெளியிடும் சிகரெட் புகையை நாம் சுவாசிக்கும் போது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் செயல்பாடு அதிகரிக்கிறது; ரத்த நாளங்களில் அழற்சியை உண்டாக்குகிறது. இதன் விளைவாக, ரத்தக் குழாய்களின் உள், வெளிப்புறத்தில், பிளாக் எனப்படும் கொழுப்பு படிமங்கள் படிகிறது. இது, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல், அவ்வப்போது மற்றவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும், ரத்த நாளங்களின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்து வது ஆய்வில் உறுதியாகி உள்ளது.

நுரையீரல்

சிகரெட் புகையால் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இது தொடர்ச்சியான இருமல், மூச்சிரைப்பு, மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் சுவாச நோய்த்தொற்று களை ஏற்படுத்தும். ஏற்கனவே ஆஸ்துமா, நாள்பட்ட சுவாச நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு, அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

கர்ப்பம் / கருவின் வளர்ச்சி

கர்ப்பிணி பெண் சிகரெட் புகையை சுவாசிப்பதால், கருவில் வளரும் குழந்தை, நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைடு போன்ற சிகரெட் புகை வெளி யிடும் நச்சுக்களை சுவாசிப்பதால், எடை குறைந்து, வளர்ச்சிக் குறைபாடுகளுடன் பிறக்கும்.

சிகரெட் புகை இல்லாத சூழலில் உள்ள குழந்தை களுடன் ஒப்பிடும்போது, புகைக்கு ஆளாகும் பச்சிளங் குழந்தைகள், உயிரிழைக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

வீடு, அறைக்குள் சிகரெட் புகைப்பதால் வெளிப்படும் புகை, பல மணிநேரம் காற்றில் தங்கி, தரைவிரிப்புகள், ஆடைகள் உட்பட அறையில் உள்ள அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் படிந்து சுற்றுப்புற மாசு உடனேயே இருக்கும்.

குழந்தைகளின் நுரையீரல், நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக வளராததால், வீட்டில் தங்கும் இந்த புகையால், சுவாசக்குழாய் தொற்றுகள், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, செவி தொற்றுகள், ஆஸ்துமா ஆகிய பாதிப்புகள் ஏற்படும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சிகரெட் புகையை சுவாசிப்பதால், சர்க்கரை நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

டாக்டர் பி.சந்தோஷ் ராஜன், வாய், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர், பெண் நலம் கேன்சர் மையம், சென்னை.

98404 16775, 98849 17484

info@pennalam.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us