PUBLISHED ON : நவ 01, 2026

நீரிழிவு நோய் இருப்பவர்கள், இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது தெரியும். இனிப்புக்காக சர்க்கரை, வெல்லம், தேன் என்று எதுவும் சேர்க்காமல், அதிமதுரம் என்ற மூலி கையை உபயோகித்து, இனிப்பு தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
எப்படி?
'மதுரம்' என்றாலே இனிப்பு என்று பொருள். அதிமதுரத்தில் இயற்கையாகவே, 'கிளைசிரிஜின்' என்ற வேதிப்பொருள் இருப்பதால், இதில் இனிப்பு சுவை அதிகம் இருக்கும்.
இதே வேதிப்பொருள் தான் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.
அதிமதுரத்தின் வேர், பட்டை பொடி, ஆயுர்வேத மருந்துக் கடையில் கிடைக்கும். அரை டீ ஸ்பூன் அதிமதுரப் பொடி, நான்கு மிளகு, இரண்டு கிராம்பு சேர்த்து, இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக குறைந்தவுடன், வெதுவெதுப்பாகக் குடிக்கலாம்.
பால் சேர்த்த தேநீர் குடித்து பழகியவர்கள், அரை டீ ஸ்பூன் அதிமதுரப் பொடியில், ஒரு டம்ளர் பால், அரை டம்ளர் நீர், ஒரு ஏலக்காய், சிறிய துண்டு இஞ்சி, இரண்டு கிராம்பு சேர்த்து, ஒரு டம்ளராக குறையும் வரை வைத்து, வடிகட்டி, காலை முதல் உணவாக குடிக்கலாம்.
இது, கணைய செல் களைத் துாண்டி இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
அடிக்கடி சளி, இருமல் ஏற்படும் குழந்தைகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை இந்த தேநீரை 20 மில்லி கொடுப்பதால், நுரையீரலை மேம்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.
ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு சளி இருப்பவர்கள், பால் சேர்க்காத அதிமதுர தேநீர் குடிக்க வேண்டும்.
டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை. 99622 62988
drmythiliayur@gmail.com
