sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

உடல் பருமன் மாயமானால் நோய்களும் மறைந்து விடும்

/

உடல் பருமன் மாயமானால் நோய்களும் மறைந்து விடும்

உடல் பருமன் மாயமானால் நோய்களும் மறைந்து விடும்

உடல் பருமன் மாயமானால் நோய்களும் மறைந்து விடும்


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை முழுவதும் உழைத்து, களைத்து ஓய்வெடுக்கும் காலத்தில், கால்களை கட்டிப்போடுவது உடல் பருமன். 60 வயதுக்கு மேல் சீரான உடல் எடை என்பது அழகு சார்ந்த விஷயம் அல்ல.. அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அடிப்படை தேவை என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் இந்து.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

வழக்கமாகவே முதுமையில் எலும்பு தேய்மானம், தசை வலுவிழப்பு இயல்பானவை. வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கம் குறைவதால், தசை அளவு குறைந்து அதற்குப் பதிலாக கொழுப்பு அதிகரிக்கும்.

இதுபோன்ற சமயங்களில், பி.எம்.ஐ., அளவு மாறாமல் இருந்தாலும் உடலில் கொழுப்பு அதிகரித்து இருக்கும். சத்தமின்றி நாளடைவில் உடல் பருமனாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

இயக்கம் குறைந்து, எடை அதிகரிப்பதால், மூட்டு வலி முதல் ஞாபக மறதி வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இளைஞர்களை காட்டிலும், உடல் பருமன் பிரச்னை முதியோரை பாடாய்படுத்துகிறது.

அதற்காக, உடல் எடை குறைக்கின்றேன் என்ற பெயரில் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது கூடாது. அதீத உடற்பயிற்சி, முதுமையில் கூடாது. திட்டமிட்ட கண்காணிப்புடன் எடை குறைப்பு பலன் அளிக்கும். மொத்த எடையில், 3 சதவீத எடை குறைப்பே ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு குறைய உதவுவதாக, ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான முறையில் எடை குறைய, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி, புரதம் நிறைந்த சமநிலை உணவு, உடற்பயிற்சியுடன் வாரம் இரண்டு நாட்கள் தசை வலுப் படுத்தும் பயிற்சி உதவும். வயதான பின் உடல் எடை அதிகரிப்பதை பலர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதை காண்கிறோம். தன்னம்பிக்கையுடன், சுதந்திரத்துடன், மரியாதையுடன் வாழவேண்டும் எனில் உடல் எடை சரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us