PUBLISHED ON : மார் 08, 2026

நாம் விலை உயர்ந்த வெளிநாட்டுப் பழங்களைத் தேடி ஓடுகிறோம். ஆனால், நம் ஊர் சந்தைகளில் மலிவாகக் கிடைக்கும் 'கொய்யா' தான் உண்மையில் ஒரு சத்து பெட்டகம் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் இந்து வைஷ்ணவி...
''நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சமமாக வைக்கவும், எடை குறைப்பு, செரிமானம் சிக்கல் நீங்கவும், தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கவும், இதய நன்மை, குடல் நலம் என பல நன்மைகள் இதில் உள்ளன. இதில் உள்ள போலேட் சத்து, கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.
தினம் ஒரு கொய்யா சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவசரமாக பள்ளிக்கு ஓடும் பிள்ளைகளும், வேலைக்கு செல்லும் பெண்களும், இதை காலை உணவாக கூட எடுத்துக்கொள்ளலாம்,'' என்கிறார் இந்து வைஷ்ணவி.
100 கிராம் கொய்யாவில் இவ்வளவு சத்துக்களா!
* 212 மி.கிராம் வைட்டமின் சி
* 5.2 கிராம் நார்ச்சத்து
* 212 மி.கிராம் பொட்டாசியம்

