தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தவறான வளர்ப்பு குழந்தை மனநலனை பாதிக்கும்

தவறான வளர்ப்பு குழந்தை மனநலனை பாதிக்கும்

தவறான வளர்ப்பு குழந்தை மனநலனை பாதிக்கும்


PUBLISHED ON : ஆக 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை பருவத்தில் ஏற்படும் மனக்காயங்கள், அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றன.

குழந்தை பருவத்து அனுபவங்களும், தாயின் மனநிலையும் ஒருவரது வாழ்நாள் நடத்தையை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதை ஆழமாக விளக்குகிறார், மனநல மருத்துவர் எந்துமதி.



அவர் பகிர்ந்து கொண்டதாவது:


கர்ப்ப காலத்தில் ஒரு தாய் சந்திக்கும் தொடர் எதிர்மறை எண்ணங்கள், குடும்ப சண்டைகள், மன அழுத்தம் ஆகியன அவரது உடலில் 'கார்டிசோல்' எனப்படும் மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கின்றன.

அதேசமயம், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும் 'டோபமைன்', 'செரட்டோனின்' போன்றவற்றை குறைக்கின்றன. இந்த வேதியியல் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும், அதன் எதிர்கால மன உணர்வுகளையும் ஆழமாக பாதிக்கின்றன.

ஒரு குழந்தைக்கு தேவைப்படுவது பாதுகாப்பும், நிபந்தனையற்ற அன்பும் மட்டுமே. குடும்ப வன்முறை, பாலியல் மற்றும் உடல் ரீதியான அத்துமீறல்கள் அல்லது கடுமையான புறக்கணிப்பு போன்ற சூழல்கள், ஆழமான உளவியல் காயங்களை(டிராமா) ஏற்படுத்துகின்றன.

​குடும்ப சண்டைகள், பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பதட்டம், துாக்கமின்மை மற்றும் கோப கட்டுப்பாடின்மையால் தவிக்க நேரிடலாம். ​

டாக்டரிடம் செல்ல தயங்காதீர்!

மன அழுத்தம், பயம் அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது தயங்காமல் உடனடியாக மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால் தவறாமல் மருந்து உட்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை செய்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

குழந்தைகளுடன் தினமும் குறைந்தது 10-15 நிமிடங்கள் மனம் விட்டு பேசி, அவர்களது உணர்வுகளுக்கு பெற்றோர் மதிப்பளிக்க வேண்டும். இதன் வாயிலாக எத்தகைய மனக்காயங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டு, அவர்களால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'உடற்பயிற்சியும் நல்ல உணவும்!'

* மருந்து உட்கொண்டு மீண்ட பின், மீண்டும் மன அழுத்த சூழலுக்குள் செல்லாமல் இருக்க, நேர்மறை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* போன் பயன்பாட்டை தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது மன அமைதிக்கு மிகவும் முக்கியம்.

* உடற்பயிற்சி, நல்ல உணவு முறை பின்பற்ற வேண்டும்.

* பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும். இவற்றை பின்பற்றினால் 'டோபமைன்', 'செரட்டோனின்' அளவு இயற்கையாகவே உயரும்; மன பிரச்னைகள் மறைந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us