sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

குழந்தையின் முக வளர்ச்சியை பாதிக்கும் மறைமுக அபாயம்

/

குழந்தையின் முக வளர்ச்சியை பாதிக்கும் மறைமுக அபாயம்

குழந்தையின் முக வளர்ச்சியை பாதிக்கும் மறைமுக அபாயம்

குழந்தையின் முக வளர்ச்சியை பாதிக்கும் மறைமுக அபாயம்


PUBLISHED ON : மே 10, 2026

Google News

PUBLISHED ON : மே 10, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயல்பாக குழந்தைகள் மூக்கின் மூலம் சுவாசிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் பல குழந்தைகள் வாயைத் திறந்து வைத்து வாய் மூலம் சுவாசித்து, துாங்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு சாதாரண பழக்கம் போல தோன்றினாலும், நீண்ட காலத்தில் குழந்தையின் முகம், தாடை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் அடிக்கடி மூக்கடைப்பு, அலர்ஜி, அடினாய்டு அல்லது டான்சில் போன்றவை ஆகும். மூக்கின் மூலம் சுவாசிக்கும் போது காற்று வடிகட்டப்பட்டு ஈரப்பதம் சேர்க்கப்பட்டு உடலுக்கு செல்லும். ஆனால் வாய்மூலம் சுவாசிக்கும் போது இந்த பாதுகாப்பு குறைந்து ரெகுலர் பழக்கமாக மாறிவிடுகிறது.

இந்த பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், பற்களில் பல எதிர்வினை மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக, மேல் பற்கள் முன்பக்கமாக தள்ளி வளருதல், பற்கள் ஒழுங்கில்லாமல் வளருதல், பற்களால் கடிக்கும் போது மேல்தாடையும் கீழ்தாடையும் சேராதிருத்தல்(ஓப்பன் பைட்) போன்ற கோளாறுகள், ஈறுகள் உலர்வது, பல் சொத்தை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.

இதனால் குழந்தையின் வாய்ப்பகுதி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. முக அமைப்பில் நீளமான முகத்தோற்றம், உதடு எப்போதும் திறந்த நிலை, கீழ்தாடை பின்தங்கிய தோற்றம் மற்றும் முக தசைகள் பலவீனமாகுதல் ஆகிய மாற்றங்கள் இந்த பழக்கத்தின் பக்க விளைவுகள் ஆகும். இதனுடன் இரவில் சத்தமாக துாங்குதல், துாக்கக் குறைவு, கவனம் சிதறுதல் போன்ற தினசரி பிரச்னைகளும் குழந்தைகளினிடையே காணப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரின் பரிசோதனை மூலம் அடினாய்டு, டான்சில் அல்லது மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் குழந்தைகள் நல பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர்கள் இந்த பழக்கத்தை சரிசெய்ய பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றனர் . பழக்கங்களை மாற்ற உதவும் கருவிகள் மூலமும் தசை செயல்பாடு சிகிச்சை மூலமும் குழந்தையை மூக்கின் மூலம் சுவாசிக்க பழக்கப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் குழந்தையின் வயது, பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை செய்யப்படுகின்றன.

ஆரம்பத்திலேயே இந்த பழக்கத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்தால், எதிர்காலத்தில் பெரிய சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும். “குழந்தை மூக்கால் மூச்சு விடுவது தான் இயல்பு; வாயால் அல்ல” என்பதை பெற்றோர் நினைவில் கொண்டு, குழந்தையின் சுவாச முறையை கவனித்தால், ஆரோக்கியமான பற்கள், தாடை மற்றும் அழகான முக வளர்ச்சியை பெறலாம்.



- டாக்டர் பிரியதர்ஷினி

குழந்தைகள் நல பல் சிறப்பு மருத்துவர்

மதுரை. 83442 24184






      Dinamalar
      Follow us