PUBLISHED ON : ஜூன் 14, 2026

கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டை விட வெப்ப அலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
கடந்த மாதம், தமிழகம் முழுதும் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இந்த அளவு வெப்பத்தில் நீண்ட நேரம் இருந்தால், வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
பொதுவாக, சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும் போது, மூளையின் பின்பகுதியில் உள்ள 'ஹைப்போதாலமஸ்' என்ற அமைப்பு தானாகவே செயல்பட்டு, உடல் வெ ப்பநிலையை 37 டிகிரி சென்டிகிரேடு என்ற அளவிற்கு பராமரிக்க வசதியாக, தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்வது, வியர்வையை வெளியேற்றுவது போன்ற செயல்கள் மூலம் சீராக வைக்கிறது.
சுற்றுப்புற வெப்பநிலை அளவுக்கு அதிகமாக உயரும் போது, நம் உடலின் வெப்பத்தை வெளியேற்றும் அமைப்பால் அதை சமாளிக்க முடியாமல் போகிறது. அதிகப்படியான வெப்பம் உடலில் தேங்கி, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, கடுமையான காய்ச்சல் மற்றும் மனக்குழப்பம், வெப்ப வாதம் போன்ற தீவிரமான பிரச்னைகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ ஆலோசனை அவசியம்.
வெப்ப பாதிப்பு
உடல் வெப்பநி லையை கட்டுப்படுத்தும் அமைப்பு பலவீனமாக இருக்கும் முதியவர்கள், பக்கவாதம் பாதித்தவர்கள், பகல் வேளையில் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
வெப்பவாதத்தை உடனடியாக கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அதிக நேரம் வெயிலில் இருந்த ஒருவருக்கு மனக் குழப்பம், துாக்க கலக்கம், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் காய்ச்சல் இருந்தால், வெப்பவாதமாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
சருமம் சூடாகவும், சிவந்தும் காணப்படும்; வியர்க்காது.
இந்த அறி குறிகள் இருந்தால், மருத்துவ உதவி பெறுவதற்கு முன், பாதிக்கப்பட்டவரை குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வெயில் காலங்களில் 'கோட், ஷூ, சாக்ஸ்' போன்றவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.
உடல் வெப்பநிலையை விரைவாக குறைக்க, உடல் முழுதும் குளிர்ந்த நீரை தெளித்து விசிறி விடுவது, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உடலை போர்த்த வேண்டும்.
இதற்கு பின், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.
வெயிலில் விளையாடுவதை தவிர்க்க...
* வெயிலில் வேலை செய்யும் போது, இடையே கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.
* காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கலாம்.
* தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது, தொப்பி, குடை மற்றும் கையடக்க விசிறி எடுத்து செல்வது, சன் ஸ்கிரீன் தடவிக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி உடல் வெப்ப நிலையை அதிகரிக்கும் என்பதால், வெப்பம் அதிகமாக உள்ள நேரத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவ்வப்போது தண்ணீர் குடிப்பது, வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது.
* வெந்நீரி ல் குளிப் பதை தவிர்ப்பது,சுற்றியுள்ள சூழலை குளிர்ச்சியாகவைத்துக்கொள்வது, வெளிர் நிற மெல்லிய பருத்தி ஆடைகளை மட்டும் அணிவது முக்கியம்.
டாக்டர் அதிதி கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ ஆலோசகர், மேத்தா மருத்துவமனை, சென்னை 98400 81326appoitments@mehtahospital.com
