தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஓரமாக அமரும் காலமல்ல, ஓய்வு காலம்! மனசுக்கு பிடித்ததை செய்யுங்கள், மகிழ்ச்சியுடன்

ஓரமாக அமரும் காலமல்ல, ஓய்வு காலம்! மனசுக்கு பிடித்ததை செய்யுங்கள், மகிழ்ச்சியுடன்

ஓரமாக அமரும் காலமல்ல, ஓய்வு காலம்! மனசுக்கு பிடித்ததை செய்யுங்கள், மகிழ்ச்சியுடன்


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணி ஓய்வுக்கு பிறகு, இனி என்ன செய்யப் போகிறோம்; பொழுது எப்படி போகும் என்ற கேள்வி எழுவது இயல்பு.

ஆனால், ஓய்வு காலம் என்பது ஓரமாக அமர்ந்து கவலைப்படும் காலமல்ல; இளமையில் பணிச்சுமையால் செய்ய முடியாமல் போன, பிடித்தமான விஷயங்களை செய்து மகிழும் வசந்த காலம் என்கிறார் உளவியல் ஆலோசகர் பிரதீபா. அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

முதியவர்களின் தனிமையை விரட்டி, உடல் ஆரோக்கியத்தையும் மூளை சுறுசுறுப்பையும், ஒருசேர தரும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறன்களுக்கு புதிய வாசல் திறக்க, ஓய்வுக்காலமே சிறந்தது.

மனதுக்கு புத்துணர்ச்சி

வீட்டு பால்கனி அல்லது மாடியில் சிறிய அளவிலான செடிகள், கீரைகள் மற்றும் பூச்செடிகளை வளர்ப்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு. மண்ணோடு கைவைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும்போது, மன அழுத்தம் நீங்கி இயற்கையோடு இணைந்திருக்கும் நிம்மதி கிடைக்கும்.

சிரிப்பு யோகாவும்

ரேஸ் கோர்ஸ் நடைபாதை, வ.உ.சி பூங்கா அல்லது குளக்கரைகளில் காலை வேளைகளில் ஒத்த வயதுடைய நண்பர்களுடன் இணைந்து நடைப்பயிற்சி மற்றும் 'சிரிப்பு யோகா' (Laughter Yoga) செய்வது தனிமையை போக்கும். காலையில் குளக்கரைகளுக்கு சென்று பறவைகளின் செயல்பாடுகளை கவனிப்பதும் மனதுக்கு அமைதி தரும்.

மூளைக்கு விளையாட்டு

ஞாபக மறதியை தடுக்க மூளைக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும். செஸ், கேரம் மட்டுமல்லாமல், பல்லாங்குழி, தாயக்கட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளையும், செய்தித்தாள்களில் வரும் குறுக்கெழுத்து போட்டிகள் மற்றும் சுடோகு புதிர்களையும் தீர்ப்பது நினைவாற்றலை பன்மடங்கு அதிகரிக்கும்.

கலை, இசை, வாசிப்பு

வண்ணம் தீட்டுதல், பின்னல் வேலைகள், காகிதப் பூக்கள் செய்தல் போன்ற கைவினை கலைகளில் ஈடுபடுவது மன ஒருமைப்பாட்டை வளர்க்கும். பழைய திரைப்பாடல்கள், கர்நாடக இசை மற்றும் பக்தி பாடல்களை கேட்பதும், பிடித்த புத்தகங்களை வாசிப்பதும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை டைரியில் எழுதுவதும் நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

பேர குழந்தைகளுடன் கதை

இன்றைய டிஜிட்டல் யுக குழந்தைகளுக்கு, தாத்தா -பாட்டிகளுக்கு உள்ள பிணைப்பை வலுப்படுத்த 'கதை சொல்லுதல்' மிக அவசியம். இரவு நேரங்களில் பேரக்குழந்தைகளுக்கு நன்னெறிக் கதைகளையும், தங்கள் இளமைக்கால அனுபவங்களையும் சொல்வது இரு தலைமுறைகளுக்கும் மகிழ்ச்சி தரும்.

புதிய கற்றல்

அருகிலுள்ள நூலகங்களை பராமரிப்பது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சிறு சமூக பணிகளில் ஈடுபடுவது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைத் தரும். மேலும், ஸ்மார்ட்போன் மூலம் வீடியோ கால் பேசுவது, யூடியூபில் புதிய சமையல் அல்லது கைவினை கலைகளை கற்றுக்கொள்வது என தொழில்நுட்பத்தோடு இணைந்து பயணிப்பதும் முதியோர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும்.

சுருக்கமாக சொன்னால், வயது என்பது வெறும் எண் மட்டுமே. பிடித்த பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்து சுறுசுறுப்பாக இயங்கினால், முதுமைக் காலமும் இனிமையாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us