தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடல் பருமனை அதிகரிக்க செய்யும் கபம்!

உடல் பருமனை அதிகரிக்க செய்யும் கபம்!

உடல் பருமனை அதிகரிக்க செய்யும் கபம்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் உறுதியாக இருக்க வேண்டும்; தசைகள் பலமாக இருக்க வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்க வேண்டும் என்றால், உடலில் கபம் சீராக இருக்க வேண்டும். நம்முடைய வளர்ச்சிப் படிநிலைகளில் பார்த்தால், குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக இருக்கும். நடுத்தர வயதில் பித்தம் அதிகரித்து காணப்படும். வயோதிகத்தில் வாதம் அதிகரிக்கும்.

உணவுகளில் இனிப்பு, உப்பு, புளிப்பு சுவைகள், கபத்தை அதிகரிக்கக் கூடியவை. காரம், துவர்ப்பு, கசப்பு ஆகியவை கபத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. அன்றாட செயல்பாட்டில், பகலில் அதிக நேரம் உறங்குவது, உணவு சாப்பிட்டவுடன் உறங்குவது, பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கபத்தை அதிகரிக்கும்.

கபம் அதிகரித்தால்...

குறிப்பிட்ட அளவுக்கு மேல் கபம் உடலில் சேரும் போது, உடல் பருமன் அதிகரிக்கும். சர்க்கரைக் நோய், உயர் ரத்த அழுத்தம், ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், சில வகையான தோல் நோய்கள், கருக்குழாய் நீர்க்கட்டி, பைப்ராய்டு என்று வாழ்க்கை முறை மாற்றத்தால், கபம் அதிகமாகி இது போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

கபத்தைக் குறைக்க...

அரிசி, கோதுமையில் செய்த சோறு, அதிக இனிப்பு சுவை கொண்டது. இதற்கு மாற்றாக, இனிப்பு சுவை குறைவாக, வறட்சி தன்மையுள்ள சிறு தானியங்களை அதிகம் சாப்பிடலாம்.

பருப்பு வகைகள், கொய்யாக்காய், மாதுளை, பப்பாளி போன்ற கபத்தை அதிகரிக்கச் செய்யாத உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக மாமிச உணவுகளை சாப்பிட்டால் கபம் அதிகரிக்கும்.

உடல் வியர்க்கும் அளவுக்கு வேலை செய்வது, தினசரி முறையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே கபத்தைக் கரைக்க முடியும். ஆயுர்வேதத்தில், பொடி தேய்த்துக் குளித்தல் என்ற முறை உண்டு. உடலில் வழக்கம் போல இல்லாமல், மாற்றாக பொடி தேய்த்து குளிப்பது,

இஞ்சி தேநீர், கசப்பு, துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், கபத் தைக் குறைத்து, உடலை உறுதியாக வைக்க முடியும்.

டாக்டர் கு.சுடர்கொடி, ஆயுர்வேத மருத்துவர், திருப்பூர் 94448 54993

sudarkodi76@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us