தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ புதிதாக கற்பது மன அழுத்தத்தை குறைக்கும்!

 புதிதாக கற்பது மன அழுத்தத்தை குறைக்கும்!

 புதிதாக கற்பது மன அழுத்தத்தை குறைக்கும்!


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீப காலமாக இளம் வயதினருக்கு நிறைய மனநலம் சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இது தான் நிலைமை.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் வளரும் சூழ் நிலை, கல்வி, போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்பு என அனைத்தும் போட்டி நிறைந்ததாக உள்ளன. இதை எதிர்கொள்வதற்கு தகுந்தவாறு அவர்களை நாம் தயார் செய்கிறோமா என்பது சந்தேகம் தான்.

மாணவர்கள், உயர் கல் விக்காகவும், வேலைக்காகவும் வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உடனடியாக ஒரு 'ஸ்டார்ட் -அப்' கம்பெனி தொடங்கி விடுகின்றனர். அதற்கான பொருளாதார வசதி அவர்களிடம் இருக்கிறது. அந்த வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள், நமக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லையே... என்ற மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்கும் போது, எத்தனை தான் நாம் திறமையானவராகவும், சாதிப்பவராகவும் இருந்தாலும், நாம் எதையும் செய்யவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இத்துடன் சேர்த்து, பல மணி நேரம் சமூக ஊடகங்களை உபயோகிப்பதாலும் பதற்றம், மன அழுத்தம் ஏற்படுகிறது.

இது தவிர, குடும்பத்தினருடன் மனதளவில் நெருக்கமாக இல்லாமல், நட்பு வட்டாரங் களும் குறைவாக இருக்கும் இளைஞர்களுக்கும் மன பிரச்னைகளை துாண்ட காரணமாக அமைகிறது.

இவை எல்லாமே சிகிச்சை தந்து முழுமையாக குணப்படுத்தக் கூடிய விஷயங்கள் தான். ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறியும் போது, பதற்றம், பயம், குழப்பம் இவற்றிற்கு சரியான ஆலோசனை, சிகிச்சை தந்து முழுமையாக குணப்படுத்த முடியும்.

ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி என தினசரி வாழ்க்கையில், ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக் கின்றனரா என்பதை, பெற்றோர் கண்காணித்து வழிகாட்டினாலே இது போன்ற பிரச்னைகளில் இருந்து இளைஞர்களை காப்பாற்றலாம். பாடங்கள் தவிர, ஆர்வம் உள்ள வேறு ஒரு விஷயத்தைக் கற்பது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள பெற்றோர், நெருங்கிய சிலர் இருப்பதும் அவசியம்.

இவையெல்லாம் செய்த பின்னும், மன அழுத்தம், பதற்றம் இருப்பது தெரிந்தால், உடனடியாக மன நல ஆலோசகர், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

உடல் நலம் குறித்த புரிதல் ஓரளவிற்கு தற்போது இருக்கிறது; அத்துடன் மன நலமும் முக்கியம்.

டாக்டர் வி,விவியன் கபில், மன நல மருத்துவர், எஸ்.ஆர்.எம்., பிரைம் மருத்துவமனை, சென்னை 89259 19941 info@srmhospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us