sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

துாக்கம் கண்களை தழுவட்டுமே!

/

துாக்கம் கண்களை தழுவட்டுமே!

துாக்கம் கண்களை தழுவட்டுமே!

துாக்கம் கண்களை தழுவட்டுமே!


PUBLISHED ON : பிப் 22, 2026

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவு, உடற்பயிற்சி போல உறக்கம் மிக அவசியம். உடல் பிரச்னையுடன் வந்தால், நல்ல துாக்கம் வருகிறதா என்பது மருத்துவரின் முதல் கேள்வியாக இருக்கும்.

அகில இந்திய பொது மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குனர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது:

உறக்கத்தில் உடல் பல வேலை செய்கிறது. தனக்கு வேண்டிய வேதிப்பொருள், ஹார்மோன்கள் உற்பத்தி செய்து, திடமான உடல், எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கிறது. போதாத உறக்கத்தால் செயல்திறன் குறைபாடு, சோர்வு, மனஉளைச்சல், கவனக்குறைவு எனப்பல பிரச்னை வரும்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், மன அழுத்தம், நாளமில்லா சுரப்பி பிரச்னை, ஹார்மோன் அதிகம் அல்லது குறைவாக சுரத்தல் என பல காரணங்கள் இருக்கிறது. இன்று உள்ள பல கருவிகளால் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கலாம். சிலர் மது அருந்தி துாங்குவர். அது செயற்கையானது, ஆரோக்கியமல்ல. துாக்கமின்மையால் பாதிக்கப்படுபவர், மருத்துவர் ஆலோசனைப்படி பக்க விளைவற்ற மாத்திரையை பழக்கப்படுத்தாமல் எடுப்பது, நல்லது.

குறட்டை நல்லதல்ல

சுவாசக்குழாய் அடைத்தல், சிறுநாக்கு பிரச்னை, இதயத்துடிப்பு மாற்றம், உடல் பருமன் போன்றவற்றால் சுவாசக்குழாய் மூச்சு விடும் போது நடுங்கும். மூச்சு சீராக வராமல் குறட்டை வரும். அது நல்லதல்ல, மருத்துவரை பார்க்க வேண்டும். மருத்துவர் 'ஸ்லீப் ஸ்டடி' செய்து எவ்வளவு நேரம் ஆரோக்கியமாக, ஆழ்ந்த, உறக்கம் உள்ளது என்று அறிவார். அறுவை சிகிச்சை, மருந்து மற்றும் யோகாவால் குறட்டை சரியாகும்.

இரவுப் பணியால் பாதிக்கும்

நேரத்தில் படுத்து நேரத்தில் எழ வேண்டும். அலாரத்தை அவசர காலத்தில் மட்டும் பயன்படுத்தலாம், தினமும் கூடாது. அலார கடிகாரத்தை விட உடல் கடிகாரம் சிறந்தது. இரவுப்பணி செய்பவர்கள் சரியாக துாங்காததால் உடலின் 'சர்கேடியன் ரிதம்' என்னும் சுழற்சி மாறும். சிலர் ஒரு வாரம் இரவு, அடுத்த வாரம் பகல் பணி செய்வர். இதற்கெல்லாம் உடலை பழக்கப்படுத்தி, தேவையான அளவு இடையூறு இல்லாமல் துாங்க வேண்டும்.

பகலில் துாக்கம்

மேலை நாடுகளில் மதியம் சிறிது நேரம் துாங்குவதை கடைபிடிக்கிறார்கள். காலை முதல் வேலை பார்க்கும் ஒருவர், மதியம் அரை மணி நேரம் வரை துாக்கினால் அதிக புத்துணர்ச்சியுடன் வேலை செய்வார். சிறு நேரம் மட்டும் துாங்குவதால் இரவு நேர உறக்கமும் பாதிக்காது, புத்துணர்வும் கிடைக்கும். அதிக நேரம் கூடாது. குழந்தைகள் 9 - 11 மணி நேரமும் பெரியவர்கள் 7 - 8 மணி நேரமும் துாங்க வேண்டும். இரவு 10 முதல் காலை 5 மணி வரை துாங்கலாம். உடலை சீராக்கும் பணி, துாங்கும் போது நடப்பதால் உடல்நிலை சரியில்லாதவர் அதிக நேரம் துாங்கலாம்.



உறங்க சிறந்த வழிகள்


காற்றோட்டமான, கொசு இல்லாத, இருள் அறையும் சாப்பாடு மற்றும் மொபைல், டி.வி.க்கு இரண்டு மணி நேரம் கழித்தும் துாங்கலாம். இசை கேட்கலாம். வயிறு நிறைய, எண்ணெய், காரம், மசாலா உணவும் மது, புகையிலை பழக்கமும் கூடாது. உடலுக்கேற்ற படுக்கும் நிலை, சரியான தலையணை பயன்படுத்தலாம். அதிகம் சிந்திக்காமல் தியானம் செய்யலாம், மூச்சை கவனிக்கலாம். காற்றோட்டமான, பருத்தி ஆடை அணிய வேண்டும்.






      Dinamalar
      Follow us