தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியமாக வாழ்வது ஒன்றும் கடினமில்லையே!

ஆரோக்கியமாக வாழ்வது ஒன்றும் கடினமில்லையே!

ஆரோக்கியமாக வாழ்வது ஒன்றும் கடினமில்லையே!


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருபத்தி நான்கு மணி நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீர் குடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் புகை பிடிக்காமல் இருந்தாலே போதுமானது என்று, இதய நோய் டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதய நோய் காரணமாக, உலகம் முழுதும் ஆண்டுக்கு ஒரு கோடியே 80 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதை எதிர்த்துப் போராடும் வகையில், உலக இதயக் கூட்டமைப்பு 'உலக இதய தின'த்தை உருவாக்கி உள்ளது.

இந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், உலகம் முழுதும் உள்ள மக்களிடையே இதய நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதயத்தை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் வைத்திருப்பது எப்படி மற்றும் அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன மற்றும் அதை எதிர்த்துப் போராட எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் என்ன, நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலக அளவில் இதய நோய் காரணமாக, அதிக அளவிலான மக்கள் மரணமடைகின்றனர். இதய ரத்த நாள பாதிப்புகள் அல்லது பக்கவாதம் போன்றவை, இதுபோன்ற இறப்புகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் அதிக நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதய நோய் ஏற்படுகிறது என்றும், இது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது என்றும் மக்களிடையே பொதுவாக தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால், 80 சதவீத இறப்புகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளிலேயே ஏற்படுகிறது.

இதய நோய்க்கு உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார அமைப்பும், இதய நோய் பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிகிச்சைக்கான அதிக செலவு மற்றும் நோய்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமை ஆகியவற்றின் காரணமாக, நோய் பாதித்தவர்களுக்கு வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த 'உலக இதய தின'த்தை கடைப்பிடித்து வருகின்றன. இதன் மூலம், இதய நோய் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது.

இந்த நோய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசும், பிற தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதய நோய் வராமல் தடுப்பதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீர், தினசரி உடற்பயிற்சி மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல் போன்றவை, நம் இதயத்தை வலிமையாக வைத்திருக்க உதவுவதோடு, இதய நோய் வராமலும் பாதுகாக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us