தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அன்பு தரும் கதகதப்பே: அல்சைமர் நோய்க்கு தீர்வு

அன்பு தரும் கதகதப்பே: அல்சைமர் நோய்க்கு தீர்வு

அன்பு தரும் கதகதப்பே: அல்சைமர் நோய்க்கு தீர்வு


PUBLISHED ON : ஆக 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று அப்பா என்னிடம், 'தம்பி சாப்பிட்டியாப்பா...' என ஓரிரு முறை கேட்ட போது, பெரிதாக தெரியவில்லை.

ஆனால், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட சில விநாடிகளிலே, மீண்டும் அக்கேள்வியை கேட்டபோது தான் மூளையில் பொறி தட்டியது. ஏன் இப்படி ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறார்?

மருத்துவ பரிசோதனையில், 'அல்சைமர்' எனும் தீவிர மூளை நரம்பு பாதிப்பு என்று தெரிந்ததும் பகீரென்றது. மனநல டாக்டர் ஷாலினி பட்டீஸ்வரனிடம் இது பற்றி கேட்டோம்.

அவர் கூறியதாவது: நமது மூளையின் செல்கள் சுருங்க ஆரம்பித்து, அப்நார்மல் புரோட்டீன்கள் படிவதால், செல்களுக்கு இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படும். பின் மூளையின் செயல்பாடுகள், மெல்ல மெல்ல முடங்கும்.

சாதாரண மறதியின் போது, உண்மையிலே மறந்த உணர்வு இருக்கும். ஆனால் அல்சைமர் நோயாளிகளுக்குத் தனக்கு மறதி நோய் இருப்பதே தெரியாது.

இதை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால், பாதிப்பின் வேகத்தைக் குறைக்க முடியும். குறிப்பாக, பழைய நினைவுகளை புதுப்பித்தல், பழைய புகைப்படங்கள், பழைய சம்பவங்களை பேசுவதால், நினைவுப்படுத்த முடியும்.

நடைபயிற்சி, காய்கறி நறுக்குதல், பூ கட்டுதல், புதிர்கள் விடுவித்தல், பல்லாங்குழி ஆடுதல், கோயில் ஆன்மிக நிகழ்வுகள் போன்றவற்றில் ஈடுபடுத்துவது, மூளைச் செல்களைத் தூண்டும். இவர்களுக்கு மறதி இருப்பதால், வீட்டின் அறைகள், கழிப்பறை கதவுகள், கிச்சன் ஆகியவை முன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கலாம். மருந்துகளை அவர்களாகவே உட்கொள்ள அனுமதிக்க கூடாது.

அன்பும் அரவணைப்பும்!

அல்சைமர் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏன், எதற்கு, எப்படி? எனக் கேள்வி கேட்டு, அவர்களைக் குழப்பக் கூடாது. அவர்களிடம் விவாதிக்காமல் அன்பாகப் பேசுவது அவசியம். பழைய நிகழ்வுகளை மறந்தாலும், தங்களை அன்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள் என்ற உணர்வை அவர்களுக்கு அளிக்க வேண்டும். நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் சகிப்புத்தன்மையோடும், மன அழுத்தமின்றியும், இந்நோய் பற்றிய புரிதலுடன் அவர்களை கையாள வேண்டும். அன்பும், அரவணைப்புமே அவர்களுக்கு சிறந்த மருந்து என்கிறார்.



ஆரம்ப அறிகுறிகள்!


பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவை மறக்காது. சமீபத்திய நிகழ்வுகள், சில மணி நேரங்களுக்கு முன் நடந்தவை மறந்துவிடும். இவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை செய்ய முடியாது. தெரிந்த ஒரு பொருளின் பெயரையே, சொல்ல முடியாமல் தடுமாறுவர். வழக்கமாக வந்து செல்லும் வழியை மறந்துவிடுவர்.

drshalini.patteeswaran.psy@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us