தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆயுள் முழுதும் தொடரும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகள்!

ஆயுள் முழுதும் தொடரும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகள்!

ஆயுள் முழுதும் தொடரும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகள்!


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என் குழந்தை, வெள்ளை சாதத்தை மட்டுமே விரும்பி சாப்பிடுவான். காய்கறி குழம்பு, கூட்டு, பொரியல் என, வேறு எதையும் சாப்பிடுவதில்லை' என சில பெற்றோர் கூறுகின்றனர். இரண்டு வயதிற்குள்ளாக என்னென்ன உணவிற்கு குழந்தைகளை பழக்குகிறோமோ, அதைத் தான் அவர்கள் விரும்பி சாப்பிடுவர் கார்போஹைட்ரேட் சத்தை மட்டுமே சாப்பிடுவது, ரத்த சோகை உள்பட பல்வேறு நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும்.

வைட்டமின் ஏ

ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், மூளையின் நரம்பு வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இதன் குறைபாடு, சரி செய்ய முடியாத அறிவாற்றல் மற்றும் இயக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. வைட்டமின் ஏ குறைபாட்டால், தட்டம்மை, வயிற்றுப்போக்கு போன்ற பருவ கால நோய் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

பார்வை செல்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வைட்டமின் ஏ இன்றியமையாதது.

துத்தநாகம்

எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சி, காயம் விரைவில் ஆறுவதற்கான நொதி வினையூக்கியாக செயல்பட துத்தநாகச் சத்து அவசியம்.

அயோடின்

ஐந்து வயதுவரை குழந்தையின் மூளை வளர்ச்சி இருக்கும். இதற்கு அவசியமான தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்கு அயோடின் தேவை. இதன் பற்றாக்குறை நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம்

எலும்புகளின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்கும், குழந்தைப் பருவ ரிக்கெட்ஸ் நோயை தடுப்பதற்கும் இச்சத்து அவசியம்.

ஊட்டச்சத்து குறைபாடைத் தவிர்க்க, குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். அதன்பின் இணை உணவுகளுடன் 2 வயது வரை தாய்ப்பால் தர வேண்டும்.

ஆயுள் முழுக்க...

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் தீவிர வைட்டமின் பி12 குறைபாட்டால், 50 வயதிற்கு பின், நரம்பு பாதிப்பு, பக்கவாதம், நடையில் தடுமாற்றம், அறிவாற்றல் இழப்பு ஏற்படலாம். மெக்னீ சியம், பொட்டாசியம் குறைபாடு, சீரற்ற இதயத் துடிப்பு, நடுக்கம், அதீத தசை பலவீனத்தை துாண்டுகிறது. கடுமையான வைட்டமின் சி குறைபாடு கொலாஜன் சிதைவடைகிறது இது சீழ் பிடித்த புண்கள், பற்கள் தளர்வதற்கும் வழிவகுக்கிறது.

டாக்டர் பெருமாள் பிள்ளை, குழந்தைகள் நல மருத்துவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனை, திருவள்ளூர் 94444 75309sppillai26@yahoo.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us