தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டூத் பிரஷ் பதிலாக மிஸ்வாக் குச்சி

டூத் பிரஷ் பதிலாக மிஸ்வாக் குச்சி

டூத் பிரஷ் பதிலாக மிஸ்வாக் குச்சி


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டூத் பிரஷ் இல்லாமல் இயற்கையான முறையில் பற்களை சுத்தம் செய்ய உதவும் பாரம்பரிய குச்சிதான் மிஸ்வாக்.

இந்த குச்சி ‛சல்வடோரா பெர்சிகா' எனப்படும் அரக் மரத்தின் கிளை, தண்டு, வேர் பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

அதன் வெளிப்புற தோலை அகற்றி, சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் நார்ப்பகுதி மென்மையாகி பிரஷ் போல் ஆகிவிடும், அதை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யலாம்.

''மிஸ்வாக் குச்சியில் சிலிக்கா, புளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, டேனின்கள் போன்ற சேர்மங்கள் இருக்கின்றன. சிலிக்கா, பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. இதில் பற்கள், ஈறுகளுக்கு உதவும் இயற்கை சேர்மங்கள் உள்ளன. சரியான முறையில் பயன்படுத்தும்போது பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது'' என்கிறார், பல் டாக்டர் நித்யா.

ஆனால் மிஸ்வாக் குச்சியை சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சாதாரண டூத் பிரஷ்ஷில் பிரிஸில்ஸ் அமைந்திருப்பதால் பற்களின் முன்புறம், உட்புறம், மேற்பரப்பு என அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்ய முடியும். மிஸ்வாக் குச்சியின் நார்கள் நேராக இருப்பதால், அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

''அதிக அழுத்தம் கொடுத்து பயன்படுத்தினால் ஈறுகள் பாதிப்படையும். குழந்தைகள் சரியான அழுத்தத்தில் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், அவர்கள் பயன்படுத்தும்போது பெரியவர்கள் கவனிப்பது நல்லது” என்கிறார் டாக்டர்.

மிஸ்வாக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. குச்சியின் பயன்படுத்திய பகுதியை வெட்டி விட்டு, அடுத்த முறை புதிய பகுதியை பயன்படுத்தலாம். இதனால் இந்த பாரம்பரிய குச்சி கவனம் பெற்றுள்ளது.

கரும்புக்கடை, பாப்புலர் சைட், எண்:18ல் உள்ள அய்மான் நட்ஸ் அண்டு டிரை ப்ரூட்ஸ் கடையில் மிஸ்வாக் குச்சி கிடைக்கிறது. இது போல் பல கடைகளில் கிடைக்கிறது. ஒரு குச்சியின் விலை ரூ.40.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us