sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தமிழகத்தில் தயாரான கலப்பட இருமல் மருந்து!

/

தமிழகத்தில் தயாரான கலப்பட இருமல் மருந்து!

தமிழகத்தில் தயாரான கலப்பட இருமல் மருந்து!

தமிழகத்தில் தயாரான கலப்பட இருமல் மருந்து!


PUBLISHED ON : அக் 12, 2025

Google News

PUBLISHED ON : அக் 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 20 குழந்தைகள் கலப்பட இருமல் மருந்தால் உயிரிழந்துள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது. காஞ்கிபுரம் ஸ்ரீசன் பார்மாவில் உற்பத்தியான இந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துகளில், டைஎத்திலீன் க்ளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு, கலப்படமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில், கலப்பட இருமல் மருந்துகளால் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

கடந்த 2020 ஜன வரியில் நான் சண்டிகர் முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், எம்.டி., பயிலும்போது, ஜம்மு, உதம்பூர் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்த பல் வேறு குழந்தைகள் சிறு நீரக செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நாங்கள் செய்த பரிசோதனையில் கோல்டு பெஸ்ட் -பிசி என்ற இருமல் மருந்தில், டை எத்திலீன் க்ளைகால் கலப்படத்தை உறுதி செய்தோம். ஹிமாச்சலப் பிரதேச மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினரின் ஆய்வின் மூலம் தொகுதி எண் டிஎல்5201-ல் இருந்த அனைத்து கோல்டு பெஸ்ட் - பிசி இருமல் மருந்து பாட்டில்களிலும் இந்த கலப்படம் உறுதி செய்யப்பட்டு, நாட்டின் வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த அந்த தொகுதியின் 3400 இருமல் மருந்து பாட்டில்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

இதனால் பல குழந்தைகள் காப்பாற்றப்படனர்.

ராம்நகரைச் சேர்ந்த 12 அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்புக்க காரணமான ஹிமாச்சல் பிரதேச மருந்து நிறுவனம் 'டிஜிட்டல் விஷன் பார்மா' சீல் வைக்கப்பட்டது.

இதன்பிறகு, ஜூலை 2022-ல் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 70 குழந்தைகள், ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் லிமிடட் மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உட்கொண்ட தால் கடுமையான சிறு நீரகப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதைப் போன்று டிசம்பர் 2022-ல் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உற்பத்தியாகும் மேரியான் பயோடெக் மருந்து நிறுவனத்தின் டோக் -1 மேக்ஸ் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கு எத்திலீன் க்ளைகால், டைஎத்திலீன் க்ளைகால் கலப்படங்களே காரணமாகும்.

இருமல் மருந்துகளில், மருந்துப் பொருட்கள் கரைவதற்கு புரோப்பலின் கிளைக்கால் கிளிசரின் மற்றும் சார்பிடால் போன்ற கரைப்பான்கள் சேர்க்கப்படும். இந்த கரைப்பான்களில் தவறு தலாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் டை எத்திலீன் க்ளைகால் கலப்படமாக இருந்ததுதான் உயிரிழப்பிற்கு காரணம். இது, தீவிர சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய விஷம்.

மருந்து ஏற்றுமதிதயில் ஆண்டுதோறும் 30 பில்லியன் டாலர், ரூபாய் மதிப்பில் 3 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி வருகிறது.

மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், தரங்குறைந்த மருதுகளை அனுமதிக்கவே முடியாது.

மாநில மருந்து கட்டுப் பாட்டுத் துறை கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

கலப்பட மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம் நாளை அக். 13 ரத்து செய்யப்பட உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க்கத்ததக்கது .

டாக்டர் மு. ஜெயராஜ், குழந்தை நல மருத்துவர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி,புதுச்சேரி. 8778533123jeyaraj.jeeva@gmail.com






      Dinamalar
      Follow us