sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேன்சர் பாதிப்பில் இருந்து காப்பாற்றியது என் நம்பிக்கை!

/

கேன்சர் பாதிப்பில் இருந்து காப்பாற்றியது என் நம்பிக்கை!

கேன்சர் பாதிப்பில் இருந்து காப்பாற்றியது என் நம்பிக்கை!

கேன்சர் பாதிப்பில் இருந்து காப்பாற்றியது என் நம்பிக்கை!


PUBLISHED ON : அக் 26, 2025

Google News

PUBLISHED ON : அக் 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வழக்கமான மருத்துவ ஆலோசனைக்காக டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணாவிடம் சென்றேன். பரிசோதனையில் எனக்கு மார்பக கேன்சர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால், எனக்கு எந்தவித பயமோ, பதற்றமோ இல்லை. காரணம், என் இரு ஆன்மிக குருக்களான காஞ்சி பரமாச்சாரியார், சுவாமி தயானந்த சரஸ்வதி இருவரின் படங்களும் அவருடைய மேஜையில் இருப்பதை பார்த்ததும் என் மனம் அமைதியானது. அவர்கள் இருவரும் டாக்டரின் உருவில் என்னை பாதுகாக்கப் போகின்றனர் என்பதை உணர்ந்தேன்.

அதனால், மார்பக கேன்சர் பாதிப்பை நான் இயல்பாக ஏற்றுக் கொண்டேன். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்த முடிகிற கேன்சர் வகைகளில் மார்பக கேன்சர் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

என்ன தான் தைரியமும், நம்பிக்கையும் நமக்குள் இருந்தாலும் அது மட்டும் போதாது. நம்மை சுற்றியுள்ளவர்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மார்பக கேன்சர் பாதிக்கப்பட்டவரை ஏதோ ஒரு வகை களங்கத்தோடு பார்க்கும் போக்கு இன்றும் உள்ளது. நான் சிகிச்சையில் இருந்தபோது, என் மீது அக்கறையாக சிலர் இருந்தாலும், பல நண்பர்கள் என்னை பார்ப்பதையே தவிர்த்தனர்.

கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதில், நம் தவறு என்று எதுவும் இல்லை. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை இருந்தால் வராமல் தடுக்கலாம் என்றாலும், நமக்கு வருவது வந்து தான் தீரும். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

பல ஆண்டுகளாக கர்நாடக இசை கச்சேரி செய்கிறேன். துவக்கத்தில் பொது வெளியில் எனக்கு வந்த நோய் பற்றி பேசுவதில் தயக்கம் நிறையவே இருந்தது. ஆனால், என் கணவர் டாக்டர் வெங்கட்ராகவன், 'நீ பேச வேண்டும். உன் இசையை கேட்க வரும் ரசிகர்கள் மத்தியில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்' என்றார்.

அதன் பின், சமூக வலைதளங்களில் பேசினேன்; பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. சிறிய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றதாக பலர் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது.

'கீமோதெரபி, டார்கெட்டெட் தெரபி' என்று என்ன விதமான சிகிச்சை பெற்றாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களால் அதை புரிந்து கொள்வது சிரமம். காரணம், சிகிச்சை அத்தனை சுலபமானது இல்லை. நம் நம்பிக்கை ஒன்று தான் இவற்றை எதிர்கொள்ள உதவும்; வெற்றி பெற முடியும்.

கடந்த ஆண்டு டிசம்பர் சீசனில் பங்கேற்க இருந்த எல்லா கச்சேரிகளையும் கேன்சல் செய்து விட்டேன். இந்த ஆண்டு வழக்கம் போல மேடையேறுவேன்!



காயத்ரி வெங்கட்ராகவன், கர்நாடக இசை பாடகி, சென்னை, 94449 71787 selviradhakrishna@gmail.com






      Dinamalar
      Follow us