sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மார்பு வலி ஏற்படும் அனைவருக்கும் ஆஞ்சியோகிராம், பை பாஸ் தேவையில்லை!

/

மார்பு வலி ஏற்படும் அனைவருக்கும் ஆஞ்சியோகிராம், பை பாஸ் தேவையில்லை!

மார்பு வலி ஏற்படும் அனைவருக்கும் ஆஞ்சியோகிராம், பை பாஸ் தேவையில்லை!

மார்பு வலி ஏற்படும் அனைவருக்கும் ஆஞ்சியோகிராம், பை பாஸ் தேவையில்லை!


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அது சார்ந்த சரியான விழிப்புணர்வும், புரிதலும் பொதுமக்களுக்கு இருக்கவேண்டியது அவசியம் என்கிறார், இருதயவியல் நிபுணர் டாக்டர் கணேசன்.

சமீபகாலமாக இதய நோய் அதிகரிக்க காரணம் என்ன?

உலகளவில் அதிக இறப்புகளில், மாரடைப்பு முதல் இடத்தில் உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையே முக்கிய காரணம். உடல் இயக்கம் குறைவு, உடல் பருமன், அதிக எண்ணெய், ஜங்க் உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அதிகரித்து, இதயத்தை சேதப்படுத்தி விடுகிறது.

யாருக்கு ஆஞ்சியோகிராம் எடுக்க வேண்டும்?

ஆஞ்சியோகிராம் என்பது, ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கண்டறியும் பரிசோதனை. அனைவருக்கும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெஞ்சுவலி, சுருக் சுருக் என குத்துவது, மூச்சு விடுவதில் சிரமம், நடந்தால் மூச்சு வாங்குவது, இ.சி.ஜி. பரிசோதனையில் மாற்றம் இருந்தால் மட்டும் எடுத்தால் போதும்.

தற்போது, பைபாஸ் அறுவை சிகிச்சை அதிகம் நடைபெறுகிறதே?

பைபாஸ் என்பது அனைவருக்கும் தேவையில்லை. மூன்று நாளங்களும் அடைத்து இருப்பவர்களை கூட, அறுவைசிகிச்சை இன்றி காப்பாற்றலாம். இறைவன் படைப்பில், ரத்த நாளங்கள் தாமாக புதிதாக உருவாகி இதயத்தை காப்பாற்றிக்கொள்ளும். சரியான உடற்பயிற்சி, உணவு முறையை பின்பற்றினாலே போதும்.

இரவு நேரத்தில் வயிற்றை நிரப்பாமல் லேசாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு பழங்கள் எடுத்துக்கொண்டால் போதுமானது. குடும்ப டாக்டர் ஒருவரை வைத்துக்கொண்டு அவ்வப்போது அவரிடம் வழிகாட்டுதல் பெற்றுக்கொண்டாலே போதுமானது.

சமீபகாலமாக பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வர காரணம்?

மெனோபாஸ் வயது வந்தாலே, மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ரத்த அடர்த்தியை குறைக்கும் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மெனோபாஸ்க்கு பின் ஹார்மோனல் மாற்றம் ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அச்சமயத்தில், யோகா, நல்ல உணவு மற்றும் துாக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

ஸ்மார்ட் வாட்ச் வாயிலாக பலர் இதய ஆரோக்கியம் கவனிப்பது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை மிக்கது?

ஸ்மார்ட் வாட்ச் தவிர்ப்பது நல்லது; கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை முழுமையாக நம்பி, ஆரோக்கியத்தை முடிவு செய்ய இயலாது.

ஜிம் செல்லும் இளைஞர்கள் இதய பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி?

ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் வியர்வை அதிகம் வெளியேறும். இதனால், சோடியம் வெளியேறி அதில் குறைபாடு ஏற்படும்.

தவிர குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த சர்க்கரை பாதிப்பு ஏற்படும். இதனால், மாரடைப்பு ஏற்படுவது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ஒன்றுக்கு, இரண்டு பாட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு, சோர்வாக இருந்தால் அதிகம் குடிக்க வேண்டும். சோர்வு அதிகம் இருந்தால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும்.

ஹார்ட் அட்டாக் - கார்டியாக் அரஸ்ட்; இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

அட்டாக் என்பது நெஞ்சுவலி. அரஸ்ட் என்பது அட்டாக் ஏற்பட்டு சரிசெய்ய முடியாமல், உச்சகட்டமாக காப்பாற்ற முடியாத நிலைக்கு செல்வது. மன அழுத்தம், துாக்கம், உணவு முறை, உடற்பயிற்சி, உடல் பருமன், தவறான பழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்புக்கு: 97518 54725drganesanks.heart@gmail.com






      Dinamalar
      Follow us