sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

கர்ப்ப கால வாய் ஆரோக்கியம்!

/

கர்ப்ப கால வாய் ஆரோக்கியம்!

கர்ப்ப கால வாய் ஆரோக்கியம்!

கர்ப்ப கால வாய் ஆரோக்கியம்!


PUBLISHED ON : ஏப் 19, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் வாய் ஆரோக்கியம், தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை தருகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய உடல் ரீதியிலான பிரச்னைகள், ஹார்மோன் மாற்றங்களால், ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. புரோஜெஸ்ரோன், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், ஈறு நோய்களை உண்டாக்க காரணமாக இருக்கின்றன.

கர்ப்ப காலத்தில், கருவின் வளர்ச்சிக்காக, பிளசென்டா எனப்படும் தாய், சேய் இணைப்புத் திசு, சில ஹார்மோன்களை சுரக்கிறது. இவை, சில சமயங்களில் இன் சுலின் செயலை தடை செய்யும்; ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால், ஈறுகள் சிவந்து, ஏற்கனவே உள்ள ஈறு நோய், மேலும் மோசமாகலாம்.

ஈறுகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் கிருமிகள், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் இதன் காரணமாக, குறைபிரசவம் ஏற்படலாம்; குறைந்த எடை உள்ள குழந்தை பிறக்கும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில கர்ப்பிணிகளுக்கு, ஈறுகளில் சிறிய கட்டி போன்று தோன்றும். இதை 'பிரக்னன்சி டியூமர்' என்பர். இது ஒரு சாதாரண வீக்கம் தான். குழந்தை பிறந்த பின்பு, தானாகவே குறைந்து விடும்.

வாய் சுகாதாரத்தை பேணுவதற்கு...

தினமும் இரண்டு வேளை பல் துலக்குவதோடு, இனிப்பு உணவுகளையும், சர்க்கரை பானங்களையும் குறைக்க வேண்டும். வாந்தி ஏற்பட்டால், தண்ணீரால் வாயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். புரதம், வைட்டமின்கள், கொழுப்பு, தாதுக்கள் என்று தினசரி தேவைக்கு ஏற்ப, சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும்.

பிரசவத்திற்கு பின், ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் தானாகவே சரியாகி விடும்.

ஒரு வேளை பல் வலி, ஈறுகளில் வலி, ஈறுகளில் ரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இருந்தால், உடனடியாக பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கர்ப்ப காலத்தில் பல் சார்ந்த சிகிச்சைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நான்கு, ஆறு மாதகர்ப்ப காலத்தில், மருத்துவரின் வழிகாட்டுதலில், பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.

பற்களில் எடுக்கப்படும் எக்ஸ்ரே, குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்டவை தான் என்றாலும், எக்ஸ்ரே எடுப்பதை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது.

கருத்தரிக்கும் முன், கர்ப்பம் உறுதியானவுடன், பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் நோய்களை தவிர்க்க உதவும்.

டாக்டர். நிர்மலா மாதவன், சுபம் பல் மற்றும் கிரேனியோஃபேஷியல் சென்டர், சென்னை. 99411 97179 / 97892 56881subhamfoundations@gmail.com






      Dinamalar
      Follow us