தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தசை சிதைவு நோய்க்கு தீர்வு தரும் பிசியோதெரபி!

தசை சிதைவு நோய்க்கு தீர்வு தரும் பிசியோதெரபி!

தசை சிதைவு நோய்க்கு தீர்வு தரும் பிசியோதெரபி!


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலின் இயக்கத்திற்கு ஆதாரமான தசைகளை, பலவீனமடையச் செய்கிறது தசை சிதைவு நோய்.

தசை புரதங்களில் குறைபாடுகள் ஏற்பட்டு, தீவிரமாகும் போது, தசை நார்கள் சிதைய ஆரம்பிக்கும். இதை, 'தசை வளக்கேடு, தசையழிவு நோய்' எனவும் சொல்வர்.

இந்நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணி, மரபணுவில் ஏற்படும் மாற்றம்.

பெற்றோரிடம் இருந்து, பிரச்னையான மரபணுவைப் பெற்ற ஒருவர், அடுத்த தலைமுறைக்கு அந்த மரபணுவை கடத்துபவராக இருப்பார். இவ்வாறான பாதிப்பை பெற்றோர் இருவரும் பெற்றிருக்கும்பட்சத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு தசை சிதைவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

ஆதிக்கம்

மரபணு பிரச்னை உடைய பெற்றோர் ஒருவரின் மரபணு ஆதிக்கம் செலுத்தும்பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு, 50 சதவீதம் தசை சிதைவு நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு, தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழக்கும் முகம் மற்றும் தோள்பட்டை தசை சிதைவு, கண், தொண்டை தசை சிதைவு, கை - கால் தசை சிதைவு ஆகியவை ஏற்படலாம்.

குரோமோசோம்கள்

தந்தையிடம் எக்ஸ் - ஒய், தாயிடம் எக்ஸ் - எக்ஸ் என தலா இரு குரோமோசோம்கள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட தந்தையின் நகல் குரோமோசோம், தாயின் எக்ஸ் குரோமோசோமுடன் சேரும் போது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தாயிடம் இதே போன்று மரபணு மாற்றப்பட்ட குரோமோசோம் இருந்தால், வளரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதனால் தான் பெண் குழந்தைகளிடையே இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

அறிகுறிகள்

நடப்பதில், படியேறுவதில், ஓடுவதில் சிரமம், அடிக்கடி தவறி விழுவது, மெதுவான நடை, தசைகளில் இறுக்கம், வலி, கெண்டைக்கால் தசைகள் இயல்பாக இல்லாதது, இதய, நுரையீரல் செயல்பட்டில் பா திப்பு, சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள், வலிமையிழந்த கண்ணிமைகள் போன்றவை.

ரத்த என்சைம்கள் பரிசோதனையில், 'கிரியாட்டின் பாஸ்போ கைனேஸ்' அளவை கணக்கிடுதல், மின்சார அலைகளின் மூலம் பாதிக்கப்பட்ட தசையின் சுருக்கம், தளர்வு ஆகியவற்றின் மாற்றங்களை கண்டறிய 'எலெக்ட்ரோ மயோகிராபி' பரிசோதனை, மூலக்கூறு மரபணு சோதனை, பாதிக்கப்பட்ட தசைகளின் மாதிரிகளை எடுத்து, பரிசோதனை செய்யும் தசை 'பயாப்சி' போன்றவை நோயை உறுதி செய்ய உதவும்.

சிகிச்சைகள்

தசை சிதைவு நோய்க்கு என்று தனியாக மருந்துகள் இதுவரை இல்லை.

சில வகையான தசை சிதைவு நோய்க்கான மருந்துகள், இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

சுவாச பிரச்னையுள்ள தசை சிதைவுநோய் உள்ளவர்கள், அதற்கான மருத்தவரிடம் ஆலோசனை பெற்று, சுவாச பிரச்னைகளை முதலில் குறைப்பது அவசியம்.

'பிசியோதெரபி'

தசை சிதைவு நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் பிசியோதெரபி பயிற்சிகள், பலன் தரும். மேலும் தசைகள் வலு குறையாமல் தடுக்கவும், அவர்களின் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு பிசியோதெரபி மருத்துவத்தில், பயிற்சிகளும், ஆலோசனைகளும் உள்ளன. மேலும், எலும்பு வளைவு குறைபாடு வராமல் தடுக்கவும் முடியும்.

பா.மு.செல்வகுமார்,

இயன்முறை மருத்துவர், இராமானுஜம் மருத்துவமனை, அம்பாசமுத்திரம் 99949 06429 sada.kark@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us