தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சீரான பழக்கங்களே சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு!

சீரான பழக்கங்களே சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு!

சீரான பழக்கங்களே சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு!


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நலமுடன் வாழ, சில சிறு குறிப்புகள் பார்வையில் இருந்தால், எண்ணத்தில் அது மாற்றத்தை தரும்,'' என்கிறார், 'ராயல்கேர்' ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறுநீரக மருத்துவ பிரிவு டாக்டர் முருகானந்த்.

அவர் கூறியதாவது:

நாம் நலமுடன் இருப்பதாகவே தோன்றினாலும், உடலுக்குள் வரும் சில பாதிப்புகள் வெளிப்பட சில நாட்களாகலாம். உறுப்புகளின் முழுமையான பாதிப்புக்கு பின்பே, நோயின் அறிகுறிகள் வெளிப்பட சில மாதங்கள் வரை எடுக்கும். சிறுநீரக பாதிப்பும் அப்படித்தான். ரத்த பரிசோதனையின்போது, சிறுநீரக பாதிப்புக்கான சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சிறு பாதிப்பும், நோய்க்கான அறிகுறி தான்.

சிறுநீரகத்தின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், சிறுநீரகம் சில காலம் இயல்பாக இயங்கும். ஆரம்ப கால பாதிப்புகள் உடனடியான அறிகுறிகளை காட்டுவதில்லை. சிறுநீரகம் பாதி அளவு பாதிப்புக்கு பின்பே ரத்தத்தில், கிரியாட்டினின் அதிகமாகிறது.

'நெப்ரான்' எனப்படும் ரத்தத்தில் நச்சு பொருட்களை பிரிக்கும் நுண்ணிய திசுக்கள், 80 சதவீதம் பாதிப்படைந்த பின்பே அறிகுறிகள் தெரியும். சோர்வு, பசியின்மை, கால்வீக்கம், மூச்சு திணறல், குமட்டல், வாந்தி, சிறுநீர் அளவிலும் நிறத்திலும் மாற்றங்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள். துவக்கத்திலேயே பாதிப்புகளை கண்டறிந்து பாதுகாப்பை தொடங்கினால், 'டயாலிசிஸ்' வரை செல்வதை தடுக்கலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய நோய்கள்.

அசுத்தமான நீரை குடித்தல், மாசுபட்ட சுற்றுச்சூழல், ஒழுங்கற்ற வாழ்வியல் முறை, காற்று மாசு, புகையிலை பயன்பாடு, புகைப் பிடித்தல், முறையாக பதப்படுத்தாத உணவு, பாஸ்பேட் நிறைந்த உணவுகள், குடிநீரில் உள்ள உலோக தாதுக்கள் போன்றவை சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தின் முறையான செயல்பாட்டிற்கு குறைந்த பட்சம், தினமும் 2 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட கூடாது. குடிப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனும் சிறுநீரகத்தை பாதிக்கும்.

பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே, உணவில் சேர்க்கும் உப்பை குறைத்துக் கொள்வது நோயின் வீரியத்தை குறைக்கும். சைவ உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி, இரவில் போதுமான அளவு உறக்கம், மன அழுத்தமின்றி அமைதியாக இருப்பது, உடல் எடையை அளவோடு சீராக வைத்திருத்தல், சிறுநீரக பாதுகாப்பில் பலனளிக்கும். சிகிச்சைக்கு புதிய மருந்துகளும் நவீன சிகிச்சையும் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us