PUBLISHED ON : அக் 12, 2025

மார்பக கேன்சர் பாதிப்பால், மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பின், மார்பக மறுசீரமைப்பு- செய்ய அறிவுறுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள நடைமுறை.
இதனால் தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பவர்கள் தவிர, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள, 70 சதவீத பெண்கள் மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.
நம நாட்டில் நிலைமை இதற்கு நேர் மாறாக உள்ளது.
முப்பத்தியெட்டு ஆண்டுகளாக லண்டனில் பயிற்சி செய்கிறேன் இது வரையிலும் 10 ஆயிரம் பேருக்கு மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
கடந்த மூன்று ஆண்டு களில் அவ்வப்போது சென்னை வருவேன். அநத் சமயத்தில் மார்பக கேன்சர் சிறப்பு மருத்துவர் கள், விருப்பம் உடைய நோயாளிகளுக்கு மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யச் சொல்வர் இப்படி 100 பேருக்கு இங்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
ஏன் இது அவசியம்?
முகத்தில் அடிபட்டு தழும்பு ஏற்பட்டால், மறு சீரமைப்பு செய்வதைப் போல மார்பகங்களை அகற்றியபின் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று பெரும் பாலும் நம் நாட்டில் நினைப்பதில்லை.
காரணம் வெளியில் தெரியாத விஷயத்திற்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை.
சமூக, மனநல பிரசனைகள்....
குழந்தைகள் பெற்று தாய்ப்பால் தரும் நோக்கம் நிறைவேறிய பின், வேறு அவசியம் மார்பகங்களுக்கு இல்லை. ஆனாலும், மார் ப கத்தை இழந்தால், தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் மனதளவில் சம்பந்தப்பட்ட பெண்ணை பாதிக்கிறது. இதை மறைப் பதற்கு சிலிக்கானில் செய்த உள்ளாடைகள் அணிவது என்று எதோ ஒரு விதத்தில் முயற்சிப்பர்.
சமீப ஆண்டுகளில், 30 வயதிற்கு கீழ் உள்ள பெண் களும் அதிக அளவில் மார்பக கேன்ச ரால் பாதிக் கப் படுகின்றனர்.
ஒரு பெண்ணின் சராசரி வாழ்நாள் 72 வயது என்றால், 30 வயதில் மார்பகங்களை இழந்து அடுத்த 40 ஆண்டுகள் அந்த குறை உடனேயே இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்?
ஒரு பக்கம் இயல்பான மார்பகம். இன்னொரு பக்கம் பெரிய தழும்புடன் ஒவ்வொரு நாளும் தன் உடம்பை பார்க்கும் பெண்ணுக்கு, தான் கேன்சர் நோயாளி என்ற நினைவு மனதை அழுத்தும்.
திருமணத்திற்கு முன் பாதிப்பு ஏற்பட்டால், எப்படி திருமணம் செய்வது?
இப்படி ஒரு குறை இருப்பதை, வெளிப் படையாக நம் சமூகத்தில் சொல்ல முடியுமா? மார்பக கேன்சர் பாதிப்பால் மார்பகத்தை இழக்க நேரிட்டால், அதற்கு மாற்றாக மறுசீரமைப்பு செய்யலாம். இயல்பான மார்பகங்களை திரும்ப பெறலாம் என்ற விழிப் புணர்வு இருந்தால், கேன்சர் பாதிப்பிலும் ஒரு நிம்மதி கிடைக்கும்.
மறுசீரமைப்பு
மார்பகத்தை அகற்ற அறுவை சிகிச்சை நடக்கும் அதே வேளையில், நோயாளியின் வயிற்றில் இருந்து மார்பகத்தின் எடைக்குத் தகுந்த கொழுப்பை அகற்றுவோம்.
மார்பு பகுதியில் உள்ள கொழுப்பு திசுக்களால் உருவானது தான் மார்பகங்கள்.
சதையை ஒரு இடத்தில் இருந்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் போது, அது உயிர்ப்புடன் செயல் பட ரத்த ஓட்டம் இருக்க வேண்டியது அவசியம்.
சி.டி., ஸ்கேன் செய்து, எந்த இடத்தில் ரத்த நாளம், ரத்தக் குழாய் உள்ளதோ அங்கிருந்து கொழுப்பு சதையை எடுத்து மார்பக வடிவில் தயார் செய்து அகற்றிய மார்பகத்தில் உள்ள ரத்த நாளத்துடன் இணைத்து விடுவோம்.
பொருத்திய நிமிடத்தில் இருந்து அந்த திசு மார் பகதின் ஒரு பகுதியாக செய்லபட ஆரம்பிக்கும்.
மயக்க மருந்து தரும் போது நோய் பாதித்த மார்புடனும், மயக்கம் தெளிந்த பின் மறுசீரமைப்பு செய்த மார்பகங்களுடன் இருப்பர்.