அதிக நேரம் அமர்ந்திருப்பது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்!
அதிக நேரம் அமர்ந்திருப்பது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்!
PUBLISHED ON : அக் 05, 2025

நம் நாட்டில் கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சருக்கான பிரதான காரணிகளில் ஒன்றான ஹெபடைடிஸ் வைரஸ், சமீப காலங்களில் புதிய வடிவங்களில் உலா வருகிறது.
ஹெபடைடிஸ் என்றால் என்ன?
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ வைரஸ்கள். இவற்றாலும், மது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஆட்டோ இம்யூன் கோளாறுகள், வளர்சிதை மாற்ற நிலைமைகளாலும் ஏற்படலாம்.
ஹெபடைடிஸ் ஏ, இ வகை தொற்று மாசுபட்ட உணவு, நீர் மூலம் பரவும் குறுகிய கால தொற்றுகள். அதே நேரத்தில் பி, சி வகைகள் நீண்ட கால தொற்றுகளாக எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே கல்லீரலை சேதப்படுத்தி விடும். தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், பைப்ரோஸிஸ் -கல்லீரலில் வடு, சிரோசிஸ் நிரந்தர வடு, கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் கேன்சருக்கு வழிவகுக்கும்.
தடுப்பூசிகள் ஹெபடைடிஸ் ஏ, பி பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் உள்ளன. நல்ல பலன்களை அளிக்கும் சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், ஆரம்ப அறிகுறிகள் இருக்காது. இதனால், தொற்று தீவிரமடையும் வரை தெரிவதில்லை.
பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை, மோசமான உணவு முறை, உடல் பருமன், டைப் - 2 நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஹெபடைடிஸ் தொற்று பாதித்தால், வளர்சிதை மாற்ற செயலிழப்பு தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் எம்எஸ்எல்டி பாதிப்பும் வரலாம்.
எம்எஸ்எல்டி என்பது, கல்லீரலில் கொழுப்பு சேர் வது, தீவிர வீக்கம், கல்லீரல் திசுக்களில் வடுக்கள் அதிகரிப்பதில் துவங்கி, இறுதியில் கல்லீரல் கேன்சர் வரையிலான கல்லீரல் பாதிப்புகளை குறிக்கிறது.
இளைஞர்களிடையே மது பழக்கம் அதிகரித்து இருப்பதால், 20 - 30 வயதிலேயே கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது.
பரிசோதனைகள், நவீன தொழில்நுட்பத்தில், கல்லீரலில் ஏற்பட்டுள்ள வடுக்களை அறிய பைப்ரோ ஸ்கேன், ஆரம்பகால வீக்கமான பைப்ரோசிஸ் இருப்பதை கண்டறிய உதவும் கல்லீரல் எம்.ஆர்.ஐ., போன்ற கருவிகள், பயாப்ஸி செய்வதற்கான தேவையில்லாமல் ஹெபடைடிஸ் பி, சி தொற்று களை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன.
ஹெபடைடிஸ் பி கண்டறிவதற்கான குவான்டிடேடிவ் ஹெபிஎஸ்எஜி மற்றும் ஹெச்பிவி மரபணு சோதனை, ஹெபடைடிஸ் சி- நோய்க்கான ஹெச்சிவி ஆர்என்எ பிசிஆர் போன்ற புதிய சோதனைகள், வைரசின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், அதற்கேற்ற வகையில் சிகிச்சை செய்வதற்கும் உதவுகின்றன. மரபணு சோதனை, மருந்தியல் மரபணு விபரக் குறிப்புகள் மூலம் சரியான வைரஸ் தடுப்பு மருந்துகளை தேர்ந்தெடுக்க முடியும். மேலும், பக்க விளைவுகள் ஏதேனும் இருக்குமா என்பதை கணிக்கவும் உதவுகிறது.
ஹெபடைடிஸ் சி பாதிப்புக்கு நேரடியாக செயல்படும் நவீன வைரஸ் தடுப்பு மருந்துகள், சிகிச்சையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கின்றன. இதன் மூலம் 95 சதவீதம் பேருக்கு முழுமையான சிகிச்சையை 8 -- 12 வாரங்களுக்கு வழங்க முடிகிறது.
டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், சுகாதாரப் பணியாளர்கள், 'ஐவி' வழியாக மருந்து உபயோகிப்பவர்கள், 2002-ம் ஆண்டுக்கு முன் ரத்த மாற்றம் பெற்றவர்கள் ஹெபடைடிஸ் பரிசோதனை செ ய்து கொள்வது அவ சியம்.
டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, கல்லீரல் சிகிச்சை பிரிவு, அப்போலோ மருத்துவமனை, சென்னை 044 28290200drilan_k@a p ollohospitals.com