sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

100 கோடி நரம்பு செல்களை இணைக்கும் டெக்னிக்!

/

100 கோடி நரம்பு செல்களை இணைக்கும் டெக்னிக்!

100 கோடி நரம்பு செல்களை இணைக்கும் டெக்னிக்!

100 கோடி நரம்பு செல்களை இணைக்கும் டெக்னிக்!


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகள் விளையாடுவதற்கு கலர் கலராக பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் வாங்கி தர வேண்டும். பல நிறங்களை தொடர்ந்து பார்க்கும் போது, மூளை நரம்புகளிடையே புதிய தொடர்புகள் ஏற்படும்.

குழந்தை பருவத்தில் இருந்தே நரம்பு செல் களின் தொடர்புகள் அதிகமாகும். எந்த அளவுக்கு தொடர்புகள் அதிகரிக் கிறதோ, அந்த அளவுக்கு குழந்தை புத்திசாலித்தனமாக இருக்கும்.

பல வண்ணங்களில் பொம்மைகளை வைத்து விளையாடுவது மட்டுமல்ல, படிப்பது உட்பட புதிதாக கற்கும் ஒவ்வொரு விஷயமும் நரம்பு செல் களுக்கிடையே தொடர்புகளை அதிகரிக்கும்.

அதிக அளவு தொடர்புகள் இருந்தால், நரம்பு செல்கள் சிதைவது குறையும்.

அறுபது வயதிற்கு மேல், 'அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ், டிமென்ஷியா' போன்ற நரம்பியல் தொடர்பான நோய்கள் வருவதும் குறையும்.

உறங்கும் செல்களை எழுப்ப...

மூளையில் 100 கோடி நரம்பு செல்கள் இருக்கலாம். இவற்றில், 20 -- 30 சதவீதம் மட்டுமே செயல்படும்; மற்றவை செயலற்ற நிலையில் உறங்கிக் கொண்டிருக்கும்.

புதிது புதிதாக கற்கும் போது மட்டுமே உறங்கும் செல்கள் விழித்து, ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

மின்சாதன பொருட்கள் வாயிலாக கற்கும் 'டிஜிட்டல் லே ர்னிங்' தலைமுறை இது.

நான் படிக்கிற காலத்தில் பெரிய பெரிய புத்தகங்களாக படித்தோம். இன்று ஏதேனும் சந்தேகம் வந்தால், பழைய புத்த கங்களை தேடுவதில்லை. 'கூகுள்' இணைய தளத்தில் பார்க் கிறேன்; எல்லா தகவல்களும் கிடைக்கின்றன. இன்றைய தலைமுறை டிஜிட்டல் மீடியாவை மட்டுமே சார்ந்திருக்கும் போது, அதிலும் புதிதாக நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டால், நரம்பு செல்களிடையே தொடர்பு ஏற்படும் என்பது தான் என் நம்பிக்கை.

டாக்டர் ரங்கநாதன் ஜோதி, நரம்பியல் சிறப்பு மருத்துவர், காவேரி மருத்துவமனை, சென்னை 044 - 4000 6000, 78711 99089info@kauveryhospitals.com






      Dinamalar
      Follow us