தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதயத்தை இயல்பாக துடிக்க செய்யும் தொழில்நுட்பம்!

இதயத்தை இயல்பாக துடிக்க செய்யும் தொழில்நுட்பம்!

இதயத்தை இயல்பாக துடிக்க செய்யும் தொழில்நுட்பம்!


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிமிடத்திற்கு 60 - 100 முறை துடிக்கும் நம் இதயம், அடிப்படையில் ஒரு மின்சார இயந்திரம்.

இதயத்திற்குள் மிகத் துல்லியமான, ஒருங்கிணைந்த முறையில் பயணிக்கும் ஒரு சிறிய மின்னழுத்தத் துடிப்பினால் இது நிகழ்கிறது.

இந்த அமைப்பு சீர்குலைந்தால், விளைவுகள் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

மெதுவாக துடிக்கும் இதயத்தை, இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு, முதன்மையான தீர்வாக 'பேஸ்மேக்கர்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருவி பல உயிர்களை காப்பாற்றியிருந்தாலும், அதற்கும் சில வரம்புகள் உள்ளன.

நிரந்தரமாக பொருத்தப்படும் பேஸ்மேக்கர், இதயத் தசைகளுடன் இணைந்து செயல்படாமல், கட்டுப்படுத்தி, இதயத்தை இயங்கச் செய்கிறது. இதனால், காலப்போக்கில் ரத்தத்தை 'பம்ப்' செய்யும் இதயத்தின் திறன் குறைந்து, இடது பக்க தசைகள் பலவீனமடைகின்றன.

இது தான், பேஸ்மேக்கரால் துாண்டப்படும் இதய தசை நோய் -'பேஸ்மேக்கர்' இன்டியூஸ்ட் கார்டியோமயோபதி.

பத்து பேரில் ஒருவருக்கு இப்பிரச்னை உருவாகலாம் என, சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட, 10 - 20 சதவீத நோயாளிகளுக்கு, சீரற்ற இதயத் துடிப்புக் கோளாறுகள் ஏற்படலாம்; இது மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.​

இதற்குத் தீர்வாக, 'கன்டக் ஷன் சிஸ்டம் பேசிங்' -சி.எஸ்.பி., எனப்படும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது இதயத்தை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதனுடன் இணைந்து செயல்படுகிறது. இதய தசையை நேரடியாகத் துாண்டுவதற்கு பதிலாக, இதயத்தின் இயற்கையான மின் அதிர்வுகளை பயன்படுத்தி, சிக்னல்களை அனுப்புகிறது. இதனால், இதயத்தின் இயல்பான துடிப்பை ஒத்த இதயத் துடிப்பை ஏற்படுத்துகிறது. இதயம் துடித்துக்கொண்டே இருப்பதை மட்டும் இது உறுதி செய்வதில்லை. இயற்கையாக உருவாக்கப்பட்ட விதத்தில் இதயம் துடிக்க உதவுகிறது.

இதயம் துடிப்பதை உறுதி செய்வது மட்டும் அல்ல; இயற்கையான விதத்தில் அது துடிக்க உதவுவதே சி.எஸ்.பி., தொழில்நுட்பம்.

டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன், மூத்த இதய மின்துாண்டல் நிபுணர், அப்போலோ மருத்துவமனை, சென்னை 99622 52500

consult@karthigesanclinic.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us