தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கல்லீரல் செயல்பாட்டை சொல்லும் ஏ.எல்.டி., பரிசோதனை!

கல்லீரல் செயல்பாட்டை சொல்லும் ஏ.எல்.டி., பரிசோதனை!

கல்லீரல் செயல்பாட்டை சொல்லும் ஏ.எல்.டி., பரிசோதனை!


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, தினமும் மது அருந்துவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, 'பேட்டி லிவர்' எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படிவது உட்பட கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டால், நோய் முற்றிய நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. காரணம், மிகப்பெரிய உள் உறுப்பான கல்லீரல், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் திறனை இயல்பாகவே பெற்று உள்ளது. 80 சதவீதத்திற்கும் மேல் செயல்பாட்டை இழந்து, இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் தான், நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் நோய் முற்றிய நிலைக்கு வந்திருக்கும். அதன்பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தவிர வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகலாம்.

ஆரம்ப நிலையில் கண்டறிய...

கல்லீரல் செயல்பாட்டை தெரிந்து கொள்ள ரத்த பரிசோதனை செய்யும் போது, ரத்தத்தில், ஏ.எல்.டி., என்ற என்சைம் அதிக அளவில் இருப்பது, கல்லீரல் செல்களில் பாதிப்பு, அழற்சி இருப்பதற்கான அறிகுறி.

கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் போது, கல்லீரல் செல்கள் இந்த என்சைம்களை அதிக அளவில் ரத்தத்தில் வெளியிடுகின்றன.

உடல் பருமன், மதுப்பழக்கம், வைரஸ் ஹெபடைடிஸ் தொற்று பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை சோதிக்கும் போது, ஏ.எல்.டி., என்சைம் அளவு அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

கல்லீரல் நோய் முற்றிய நிலையில், ஏ.எல்.டி., மற்றும் பிற கல்லீரல் என்சைம்களை வெளியிட போதுமான கல்லீரல் செல்கள் இல்லாமல் போய்விடும். எனவே, 'லிவர் சிரோசிஸ்' எனப்படும் கல்லீரல் செயல் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு, அல்ட்ராசவுண்ட், கல்லீரல் பாதிப்பின் தீவிரத்தை அறிய, பைப்ரோ ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

கல்லீரல் பாதிப்பிற்கான காரணத்தை கண்டறிந்து, தேவையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், கல்லீரல் பாதிப்பை முற்றிலும் சரி செய்ய முடியும்.

டாக்டர் தினேஷ் ஜோதிமணி, இயக்குநர், கல்லீரல் சிறப்பு மருத்துவர்,ரேலா மருத்துவமனை, சென்னை. 91500 35026

jothimani@r elahospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us