sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

வாய் என்பது உடலின் ஜன்னல்!

/

வாய் என்பது உடலின் ஜன்னல்!

வாய் என்பது உடலின் ஜன்னல்!

வாய் என்பது உடலின் ஜன்னல்!


PUBLISHED ON : பிப் 22, 2026

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல் வலி, சொத்தைப் பல் இவற்றையே பல் பிரச்னைகளாக நினைக் கிறோம்.

உண்மையில் வாய் ஆரோக்கியம் என்பது முழு உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பல், ஈறு ஆரோக்கியம், பல உடல் நோய்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

வாயில் ஏற்படும் தொற்றுகள், குறிப்பாக, ஈறு நோய்கள், வாயிலுள்ள கிருமிகள் ரத்த ஓட்டத்துக்குள் செல்ல காரணமாகலாம். இதனால் உடலில் நீண்டகால அழற்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த அழற்சி, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற ரத்த நாள நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயும், பல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு நோய் பாதிப்பு வருவது பொதுவான ஒன்று.

அதே நேரத்தில், ஈறு நோயால் ஏற்படும் அழற்சி, இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, சர்க்கரை கட்டுப்பாட்டை மோசமாக்கலாம்.

பற்கள் விழுவது, பல் சிதைவு போன்ற பிரச்னைகள், உணவை நன்றாக மென்று சாப்பிடும் திறனை குறைக்கும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து சரியாக கிடைக்காமல், சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வயதானவர்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.

கர்ப்ப காலத்தில், பல் மற்றும் ஈறு ஆரோக்கியம், மிக முக்கியமானது. குழந்தைகளிலும் பல் வலி, பல் சிதைவு உணவு, துாக்கம், வளர்ச்சி மற்றும் படிப்புத் திறனை பாதிக்கக்கூடும்.

பல உடல் நோய்கள், வாயில் முதற்கட்ட அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

ரத்தச் சோகை, எலும்பு தேய்மானம், வாய்ப்புண்கள், ஈறுகளில் ரத்தம் வடிவது, பல் தளர்வு போன்ற மாற்றங்கள் வரலாம்.

பிளவுபட்ட உதடு, உள் நாக்கு, பல் இல்லாமை, தாடை மூட்டு கோளாறு போன்ற பிரச்னைகள் ஒருவரின் பேச்சு, உணவு உட்கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தி, தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும்.

அதனால் தான், வாய் என்பது உடலின் ஜன்னல் என்று கூறப்படுகிறது.

டாக்டர் எஸ்.வேதநாயகி, பல் மருத்துவர், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,சென்னை 99956 15677vedhanayakisenthils@gmail.com






      Dinamalar
      Follow us