PUBLISHED ON : ஜன 04, 2026

ஒவ்வொருவரின் உடலிலும், ஒவ்வொரு வயதிலும் ஹார்மோன் மாற்றங்களால், வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படும்.
அவற்றிற்கு ஏற்றவாறு எப்படி கவனிப்பை தர வேண்டும் என்பது முக்கியம். பெண் குழந்தைகளின் உடலில், 'டீன் -ஏஜ்' ஆரம்பத்தில் மாதவிடாய் துவங்கும் போது, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங் களால் மார்பக வளர்ச்சி ஆரம்பிக்கும். இந்த மாற்றங் களால், பெண் குழந்தைகளின் மனதில் பயம், குழப்பம், கூச்சம், தயக்கம் போன்ற கலவையான உணர்வுகள் தோன்றும்.
இதை கவனித்தாலும் என்ன செய்வது என்று புரியாமல், குழப்பத்தில் பெற்றோரும் அப்படியே விட்டு விடுவர்.
இந்த வயதில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு மிகவும் முக்கியம். உடல் மாற்றம், உருவம் தொடர்பாக பள்ளியில் ஏதாவது பிரச்னையை எதிர்கொள்கின்றனரா என்பதையும் கேட்க வேண்டும். உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றம் இயல்பானது என்பதை குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.
டீன் ஏஜில் உடல் வளர்ச்சி யோடு, மன வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
என்ன செய்யலாம்?
இப்போதெல்லாம், 11 - 12 வயதுள்ள பெண் குழந்தைகள் பருவம் அடைந்து விடுகின்றனர். மார்பக வளர்ச்சி ஏற்பட துவங்கி விடுகிறது. அது குறித்து பேச அவர்கள் தயக்கப்பட்டாலும், பெண்களின் தாயே அதை எடுத்துச் சொல்லி, அதற்கேற்ற உள்ளாடையை அணிவிக்கச் சொல்லி, குற்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும், அவர்கள் ஓடியாடி விளையாடும் போது, கச்சிதமான உள்ளாடைகள் இவர்களுக்கு உறுதுணை யாக இருக்கும். உள்ளாடை அணியும் போது மார்பக வலி, கழுத்து வலி குறையும்.
இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவெனில், மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளாடைகளையும் மாற்ற வேண்டும் என்பது தான்!
உள்ளாடை அணியும் போது மேற் கூறிய பாதுகாப்பு விஷயங்களுடன், கூன் முதுகுடன் நடக்கும் பழக்கத்தையும் தவிர்க்கலாம். இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் ஏற்படும்; பாதுகாப் பாகவும் உணர்வர்!
மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன?
பெண் குழந்தை களின் தன்னம்பிக்கை குறைந்து விடும். சக வயது குழந்தைகளுடன் சகஜமாக பழகுவதில் தயக்கம் ஏற்படும். இருபாலரும் படிக்கும் பள்ளி என்றால், எதிர் பாலினத்தவர் கிண்டல் செய்தால், அதன் பின் இயல்பாக இருக்க முடியாமல் பய உணர்வு வந்து விடும். மாணவர்கள் இருக்கும் இடத்தை கடந்தாலே, யாராவது கிண்டல், கேலி செய்வரோ என்ற பதற்றம் வரும். இதை கவனிக்காமல் அப்படியே விட்டால், பயம், பதற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகள், எந்த ஒரு செயலை செய்வதையும் தடுக்கும்.
தடகள விளையாட்டில் 10 வயது வரை ஆர்வத்துடன் பங்கு பெற்ற குழந்தை, அதன்பின் விளையாடத் தயங்கும். டீன் ஏஜ் விளையாட்டில், பள்ளி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதில் ஆர்வம் ஏற்படும் பல குழந்தைகள், உடல் மாற்றத்தை யாராவது கேலி செய்வரோ என்ற தயக்கத்தால், பயத்திலேயே கலந்து கொள்ளமாட்டர்.
டீன் ஏஜ் குழந்தைகள் தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளை, அவர்களுக்கு உள்ளேயே வைத்து, தாழ்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வரே தவிர, பெற்றோரிடம் சொல்ல மாட்டர். இன்னொரு புறம், அதற்கான இடத்தை பெற்றோரும் தருவதில்லை.
பொருத்தமான உள்ளாடைகள் அணிவது, குழந்தைக்கு எந்த அளவு தன்னம்பிக்கையை தரும் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணர்வதில்லை.
சில வகை உடைகளை அணிவதில், புதிதாக ஒன்றை கற்பதில் கு ழந்தை தயங்குகிறது என்றால், பொருத்தமான உடை அணியாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
டாக்டர் ஸ்வாதிகா ராஜேந்திரன், மகளிர் நல மருத்துவர், காவேரி மருத்துவமனை, சென்னை 044 - 4000 6000info@kauveryhospital.com

