தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெண்கள் புரிந்து கொள்ளாத மன அழுத்த ஹார்மோன் ரகசியம்!

பெண்கள் புரிந்து கொள்ளாத மன அழுத்த ஹார்மோன் ரகசியம்!

பெண்கள் புரிந்து கொள்ளாத மன அழுத்த ஹார்மோன் ரகசியம்!


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒழுங்கற்ற, தாமதமாக மாதவிடாய் ஏற்படுவதற்கு, நாம் தான் பல காரணங்களை நினைக்கிறோம். உண்மையில், மன அழுத்தம் இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை, பல நேரங்களில் பெண்கள் உணர்வதில்லை.

மன அழுத்தம் ஏற்படும் போது, 'கார்டிசோல்' எனப்படும் 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து கார்டிசோல் அளவு அதிகமாக இருக்கும் போது, உடலின் உள் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை பாதிப்படைகிறது. இதன் காரணமாக, கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு மாதவிடாய் தாமதமாகவும், ஒழுங்கற்றதாகவும் மாறலாம், தற்காலிகமாக நின்றும் விடலாம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

• தாமதமான மாதவிடாய்.

• வழக்கத்திற்கு மாறாக, அதிக அல்லது குறைந்த ரத்தப்போக்கு.

• தீவிரமான மாதவிடாய்க்கு முன், அறிகுறிகளான சோர்வு, பதற்றம், தலைவலி, செரிமானமின்மை.

மருத்துவ ஆலோசனை

தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருப்பது, தீவிர வலி, அதிக ரத்தப்போக்கு, உடல் எடையில் மாற்றம் ஏற்படுவது ஆகியவை இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

டாக்டர் கிரிஜா அசோக்குமார், மூத்த மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், வி.எஸ் மருத்துவமனை சென்னை. 90211 23000care@vshospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us