sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

உலகம் அப்படியே சுற்றி சுழலுகிறதே!

/

உலகம் அப்படியே சுற்றி சுழலுகிறதே!

உலகம் அப்படியே சுற்றி சுழலுகிறதே!

உலகம் அப்படியே சுற்றி சுழலுகிறதே!

1


PUBLISHED ON : செப் 21, 2025

Google News

PUBLISHED ON : செப் 21, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி போன்று வெர்டிகோ -தலைசுற்றல் என்பதும் ஒரு அறிகுறி. எதனால் வெர்டிகோ வருகிறது என்பதை கண்டுபிடித்தால் தான் சிகிச்சை செய்ய முடியும்.

அறிகுறிகள்

உலகமே சுற்றுவது போல உணர்வது, லேசான தள்ளாட்டம். ஒரு பக்கம் உடம்பு இழுப்பது போன்று உணரும் போது, ஆதரவாக எதையாவது பிடித்தால் இயல்பாக இருக்க முடிவது, நேராகப் பார்க்கும் பிம்பங்கள் அனைத்தும் ஆடுவது போன்ற தோற்றம், நடந்தால் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தினால் எங்கேயும் போகாமல் இருந்த இடத்திலேயே இருப்பது பொதுவான அறிகுறிகள்.



எதனால் வருகிறது?


இயல்பாக 'பேலன்ஸ்' - நிலை தடுமாறாமல் எப்படி இருக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள் காதில் இருக்கும் 'வெஸ்டிபுளார் அபாரடிஸ்' என்ற பகுதி, நாம் எந்தப் பக்கம் திரும்புகிறோம், குனிகிறோமா, நேராக அமர்ந்திருக்கிறோமா போன்ற தகவல்களை மூளைக்கு சொல்கிறது. அடுத்தது கால், கை நரம்புகளில் இருந்து எந்த நிலையில் இருக்கிறோம் என்ற தகவல் மூளைக்கு தெரியும்.

அடுத்ததாக என்ன அசைவு உடலில் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப மூளை அனுசரித்துக் கொள்ளும். நம் உடல் சமிஞ்சைகள் எல்லாம் மூளைக்கு வரும் போது அதற்கு தகுந்தாற் போல இயக்கங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சிறு மூளை கண்காணிக்கும். பெரு மூளையில் இந்த தகவல்கள் அனைத்தும் சென்று சேரும்.

இந்த இயக்கத்தில் எந்த இடத்தில் பிரச்னை என்றாலும் வெர்டிகோ வரலாம். பக்கவாதம், பாரக்கின்சன்ஸ், சர்க்கரை நோயால் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது காதில் படிமம் உருவாகி அசைவது என்று பலவித பிரச்னைகளால் தலை சுற்றல் வரலாம்.

40 சதவீதம் நரம்பியல் பிரச்னைகளாலும், 40 சதவீதம் காது, மூக்கு, தொண் டையில் ஏற்படும் கோளாறுகளாலும் மீதி 20 சதவீதம் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களால் தலைசுற்றல் ஏற்படலாம்.

எந்த வயதில்....

வெர்டிகோ எந்த வயதிலும் வரலாம். அதே சமயம், அந்தந்த வயதில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு ஏற்ப தலைசுற்றலுக்கான காரணங்கள் மாறுபடும்.

வாழ்க்கை முறை மாற்றமும் வெர்டிகோவிற்கு காரணமாகிறது.

குறிப்பாக, 'வெஸ்டிபிளார் மைக்ரேன்' எனப்படும் தலை வலி, நேரத்திற்கு சாப்பிடாதது, போதுமான அளவு துாக் கம் இல்லாதது, அதிக ஒலி, வெயிலில் செல்வது போன்றவை. 40 வயதிற்கு மேல் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு தலைசுற்றல் வரலாம்.

இது தவிர, வைட்டமின் டி குறைபாடு, வைட்டமின் பி 12 குறைபாட்டினால், புற நரம்பு மண்டலம் பலவீனமாவது, தலையில் அடிபட்டால் சிகிச்சைக்கு பின் தலைசுற்றல வரலா ம்.

தலைசுற்றல் என்பது எவ்வளவு மிதமாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யக் கூடாது. வழக்கத்திற்கு மாறாக சிறிய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசன பெற்றால் அதை சுலபமாக கண்டறிந்து சரி செய்யலாம்.

செர்விக்கல் ஸ்பான்டி லோசிஸ் எனப்படும் கழுத்து வலியால் வெர்டிகோ வருவது மிகவும் அபூர்வம். காலையில் செய்யும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் வெர்டிகோ வராமல் தடுக் கும்.

டாக்டர் பிரபாஸ் பிரபாகரன், நரம்பியல் சிறப்பு மருத்துவ ஆலோசகர், சிம்ஸ் மருத்துவமனை, சென்னை 044 2000 2001, 987771 15223enquiry@siimshospital.com






      Dinamalar
      Follow us