sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க செய்ய சிகிச்சை உண்டு!

மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க செய்ய சிகிச்சை உண்டு!

மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க செய்ய சிகிச்சை உண்டு!


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் பிசிஓஎஸ் என்று சொல்லப்படும் கருக்குழாயில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்னை, 10 பெண் களில், மூன்று பேருக்கு உள்ளது.

இந்த மூவரில், ஒருவர் உடல் பருமனுடனும், ஒருவர் ஒல்லியாகவும், ஒருவர் சரியான உடல் எடையுடனும் இருக்கிறார். 16 - 21 வயது வரை உள்ள பெண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. இது தவிர, சில பெண்கள், இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்யும் போது, கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருக்கும். பரிசோதித்தால், பிசிஓஎஸ் இருப்பது தெரிய வரும்.

'பிசிஓடி, பிசிஓஎஸ்' என்ன வேறுபாடு?

மாதம் ஒரு கருமுட்டை உருவாகி, முதிர்ந்து, உடைந்து வெளிவருவது இயல்பானது. இ தற்கு பதிலாக, முதிர்ச்சியடையாத, பாதி முதிர்ந்த நிலையில் பல கரு முட்டைகள், ஒரு கருக்குழாயிலோ, இரு கருக்குழாயிலுமோ உருவாவது பிசிஓடி. இதனால், சீரற்ற மாதவிடாய், பல மாதங்கள் மாதவிடாயே வராமல் போவது இருக்கும்.

இந்த பாதிப்பினால், மனநிலையில் மாறுபாடு, கணையம் சுரக்கும் இன்சுலின் முழுமையாக வேலை செய்யாதது, உடல் பருமன், ஹார்மோன் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுகிறது. இது போல பல கோளாறுகளின் தொகுப்பை பிசிஓஎஸ் என்கிறோம்.

ஆயுர்வேத சிகிச்சை

அதிக உடல் எடையால் இப்பிரச்னை என்றால், உடல் எடையைக் குறைத்தாலே மாதவிடாய் சீராகி விடும்.

உக்ஷ்னா தெரபி எனப்படும் மூலிகைப் பொடியால் செய்யும் மசாஜ், கஷாயதாரா எனப்படும் உடல் முழுதும் மருந்து கலந்த மோர் ஊற்றுவது, அவரவர் உடல் தன்மைக்கு ஏற்றவாறு, உடலை ஐந்து வழிகளில் சுத்திகரிப்பு செய்யும், பஞ்சகர்மா சிகிச்சையும் செய்வோம்.

மன அழுத்தம் இருந்தால், கார்ட்டிசால் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். மோர் கலந்த மூலிகை மருந்து கலவையை, 30 - -90 நிமிடங்கள், நெற்றியில், இரு புருவங்களுக்கு மத்தியில், சொட்டுச் சொட்டாக விழச் செய்யும், ஷிரோதாரா, மூலிகை மருந்து கலந்த வெதுவெதுப்பான எண்ணெயால் உடல் முழுதும் மசாஜ் செய்யும் அப்பியங்கம் போன்ற சிகிச்சைகள் தரும் போது, டோபமின், செரடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோனை துாண்டும்.

சிகிச்சைவுடன் வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம்



டாக்டர் வி.எம். மோனிஷா, ஆயுர்வேத மருத்துவர், அப்பல்லோ மருத்துவ மையம், சென்னை. 95666 25848monisha__m@ayurvaid.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us