தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அளவோடு சாப்பிட்டால் ஆபத்தில்லை

அளவோடு சாப்பிட்டால் ஆபத்தில்லை

அளவோடு சாப்பிட்டால் ஆபத்தில்லை


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் சைலிடால், சார்பிட்டால், லேக்டிட்டால் உள்ளிட்ட இனிப்புகள், தற்போது சுகர் ப்ரீ குக்கீஸ், சாக்லேட்ஸ், கேண்டீஸ், சூயிங்கம் என பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சர்க்கரையை விட மெதுவாக ரத்தத்தில் கலப்பதால், சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதை தவிர்க்கும் தன்மை சைலிடாலுக்கு உள்ளது என்கிறார், உணவு மற்றும் ஜீரணவியல் சிறப்பு மருத்துவர் ராஜா.

''சுகர் ஆல்கஹால் என்ற வகையை சேர்ந்தவை இவை. பெயரில் 'ஆல்கஹால்' இருப்பதால், இதில் மதுபானங்களில் காணப்படும் எத்தனால்' உள்ளது என்று அர்த்தமில்லை. இது வேறுபட்ட கெமிக்கல் ஸ்ட்ரக்ச்சரை கொண்ட இனிப்பு. சுகர் ப்ரீ என்பதால் அளவில்லாமல் சாப்பிடலாம் என்றில்லை.

அதிகமாக உட்கொள்ளும் போது வயிறு உப்புசம், வயிற்று பொருமல், வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அளவாக எடுத்துக்கொண்டால் பிரச்னை இல்லை.

குழந்தைகளுக்கு சுகர் ப்ரீ குக்கீஸ், சாக்லேட்ஸ் வாங்கும்போது, 'சுகர் ப்ரீ' என்பதை மட்டும் பார்க்காமல், அதில் சேர்க்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு விவரங்களையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

சைலிடால் பற்றி வெளியான செய்தியில், இதை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றிருந்தது. ஆனால் சிறியளவில் உணவில் பயன்படுத்தும் போது, எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என்கிறார் டாக்டர் ராஜா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us