தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சைனஸ் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் தும்பைக் கீரை மசியல்!

சைனஸ் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் தும்பைக் கீரை மசியல்!

சைனஸ் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் தும்பைக் கீரை மசியல்!


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைனஸ், ஒற்றை தலைவலி பாதிப்பு உள்ளவர்கள், வாரத்திற்கு இரண்டு முறை ஆவது, அன்றாட உணவில், சேர்க்க வேண்டி யது தும்பைக் கீரை. இதன் இலைகளை எடுத்து, சுத்தம் செய்து கீரை மசியல் செய்து சாப்பிடலாம். இதனால், நோயின் தீவிரம் படிப்படியாக குறையும்.

சைனஸ் பிரச்னை இருப்பவர் களுக்கு தலைவலி, தலை பாரம், மூக்கில் நீர் வடிதல் அதிகமாக இருக்கும். தும்பைக் கீரை நோயின் தீவிரத்தை தடுப்ப தோடு, எதிர்காலத்தில் சைனஸ் அறிகுறிகள் வராமல் செய்யும் தன்மையும் கொண்டது.

சைனஸ் பிரச்னையால் மூக்கடைப்பு இருந்தால், தும்பைச் செடியில் உள்ள வெள்ளை நிறப் பூக்களை எடுத்து கைகளால் கசக்கும் போது, வடியும் சாற்றை, மூக்கின் இரு துவாரங் களிலும் இரண்டு சொட்டு விடலாம். மூக்கின் உள்ளே சாறு செல்லும் போதே, மூக்கடைப்பு நீங்குவதை உணர முடியும்.

ஒரு நாளில் ஒரு முறை என்று தொடர்ந்து ஐந்து நாட்கள் இப்படி செய்யலாம். தீவிரமான அறி குறிகள் இருந்தால், இலைகளை அரைத்து வடிகட்டி, ஒரு டீ ஸ்பூன் சாறுடன், அதே அளவு தேன் கலந்து, காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன், ஐந்து நாட்கள் குடிக்கலாம். சளிகளை இயற்கையாக வெளியேற்றும் தன்மை தும்பை சாறுக்கு உண்டு.

சைனஸ் நோயாளிகளுக்கு தலை பாரமும் பெரிய தொல்லை; தும்பை இலைகள், பூக்கள் சேர்த்து, ஒரு கை பிடி அளவு எடுத்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, ஆற வைத்து, கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். வாரத்தில் இரு நாட்கள், தேவையான அளவு எடுத்து, லேசாக சூடுபடுத்தி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்; தலை பாரம் நாளடைவில் குறையும்.



டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை. 99622 62988drmythiliayur@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us