தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நிறைவேற்றாத ஆசைகளை இப்போது நிறைவேற்றலாம் காற்றில் இலை மிதப்பது போல!

நிறைவேற்றாத ஆசைகளை இப்போது நிறைவேற்றலாம் காற்றில் இலை மிதப்பது போல!

நிறைவேற்றாத ஆசைகளை இப்போது நிறைவேற்றலாம் காற்றில் இலை மிதப்பது போல!


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: முதுமை என்றாலே, வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பதும், படித்ததையே படித்து, பழைய பஞ்சாங்க கதைகளையே பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை.

அடைகாத்த பழைய ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்பளித்தாலே போதும். உடல், மன நலனை கிரீன் சிக்னலில் வைத்து கொள்ளலாம் என்கிறார், அரசு மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப்பிரிவு டாக்டர் ஷாலினி பட்டீஸ்வரன்.

வயதாகும்போது வேகமாக நடக்க முடியாது; உடல் சோர்வு ஏற்படலாம்; நினைவாற்றலிலும் சில மாற்றங்கள் தெரியலாம். பணியிலிருந்து ஓய்வுபெறுதல், பிள்ளைகள் வேறு ஊர்களில் வசித்தல், வாழ்க்கை துணையை இழத்தல் போன்ற நிகழ்வுகளும், மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இத்தகைய சூழல்களில், முன்பு இருந்த வாழ்க்கை முறையை நினைத்துக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்க வேண்டும். உடல்நிலைக்கு ஏற்ற செயல்பாடுகளை தேர்ந்தெடுத்து, பிடித்த விஷயங்களில் ஈடுபட வேண்டும்.



கற்க வயது தடையில்லை


இளமையில் குடும்ப பொறுப்புகள், வேலை, குழந்தை வளர்ப்பு என பல காரணங்களால் சில ஆசைகளை ஒத்திவைத்திருக்கலாம். இப்போது அவற்றை செய்யலாம்.

ஓவியம் வரைவது, பாட கற்றுக் கொள்வது, இசைக்கருவி வாசிப்பது, தையல், 'பேக்கிங்' கற்பது என, மனதில் தேங்கி கிடங்கும் பழைய ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவசியமில்லை. புதிதாக ஒன்றைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும், முயற்சி செய்வதுமே முக்கியம்.



தொழில்நுட்பம் கற்கலாம்


புதிய தொழில்நுட்பங்களை கற்பது அவசியம். அது புதிய உலகத்தை திறந்து காட்டும். ஸ்மார்ட்போன், இணையதளத்தை பயன்படுத்த தெரிந்தால், வீட்டில் இருந்தபடியே பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆன்லைனிலே தொழில், நிதி சார்ந்த ஆலோசனைகள் பெறலாம்.

உங்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், சவால்கள், வெற்றி, தோல்விகள் என பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். இவற்றை, சமூக வலைதளங்களில் எழுதலாம். இ-புத்தகமாக வெளியிடலாம். வீடியோவாக பேசலாம்.

இணைய உலகத்திற்குள் வந்துவிட்டால், 24 மணி நேரமும் நொடியில் கரைவதை உணர முடியும்.

காற்றில் இலை மிதப்பது போல!

முதுமையில், ஜெயித்தே தீர வேண்டுமென்ற அழுத்தம் இல்லை. காற்றில் ஒரு இலை மிதப்பது போல, வாழ்வை மிக லேசாக அணுகக்கூடிய பருவம். குடும்பம், பேரக்குழந்தைகள், நண்பர்கள் என கூட்டமாக வாழ வாய்ப்பு இல்லாத பட்சத்தில் கூட, உங்களுக்காக, உங்கள் கனவுகளுக்காக வாழ ஆரம்பித்தால், ஒவ்வொரு நாளும் புதுசு. திரும்பும் உங்கள் வயசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us