sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டிசம்பர் - மார்ச் மாதத்தில் வமன பஞ்சகர்மா

/

டிசம்பர் - மார்ச் மாதத்தில் வமன பஞ்சகர்மா

டிசம்பர் - மார்ச் மாதத்தில் வமன பஞ்சகர்மா

டிசம்பர் - மார்ச் மாதத்தில் வமன பஞ்சகர்மா


PUBLISHED ON : டிச 28, 2025

Google News

PUBLISHED ON : டிச 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயுர்வேத மருத்துவ முறையில், பஞ்சகர்மா சிகிச்சைகள் உடலின் அடிப்படை சமநிலையை, அதாவது வாத, பித்த, கப தோஷங்களை சமநிலையில் பராமரிக்க உதவுகின்றன.

இவற்றில் வமன பஞ்சகர்மா என்பது கப தோஷத்தை கட்டுப்படுத்தவும், அகற்றவும் மிக முக்கியமான சுத்தி க ரிப்பு சிகிச்சையாகக் கருதப்படுகிறது.

வமன பஞ்சகர்மா என்றால் என்ன?

வமன பஞ்சகர்மா என்பது, முறையாக முன்னேற்பாடு செய்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கப தோஷத்தை வாந்தி மூலம் வெளியேற்றும் சிகிச்சை முறையாகும். இது வெறும் அறிகுறி நிவாரணமாக அல்ல, நோயின் மூல காரணத்தையே அகற்றும் ஆழமான சுத்திகரிப்பு முறையாகும்.

ஏன் டிசம்பர் - மார்ச் காலகட்டத்தில் செய்ய வேண்டும்?

ஆயுர்வேத காலநிலை கோட் பாட்டின்படி ஹேமந்த ருது -டிசம்பர் - ஜனவரி, சிசிர ருது - பிப்ரவரி - மார்ச்.

இக்காலங்களில் குளிர் காரணமாக கப தோஷம் உடலில் சேர்ந்து உறைகிறது இதை அப்படியே விட்டால், மார்ச் மாதத்தில் கபம் உருகி நோய்களாக வெளிப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது

எனவே, இந்த காலகட்டத்தில் வமன சிகிச்சை அளிப்பது நோய்கள் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும்.

டிசம்பர்-மார்ச் மாதத்தில், வமன பஞ்சகர்மா செய்தால், ஆஸ்துமா, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி கோளாறுகள், நீண்ட நாள் இருமல்,

சைனஸைட்டிஸ், கபத்தினால் வரும் தோல் நோய்கள், அதிக உடல் எடை, உடல் உள் செயல்பாடுகளில் எற்படும் மெட்டபாலிக் கோளாறுகள், நீரிழிவு ஆரம்ப நிலை, ஐபிஎஸ் எனப்படும் குடல் அழற்சி, தைராய்டு கோளாறு உட்பட கபம் சார்ந்த நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வமன பஞ்சகர்மா பலன்கள்:

உடலில் சேர்ந்த 'ஆம' எனப்படும் நச்சுக்கள் முழுமையாக அகற்றப்படுகிறது.

ஜீரண அகினி மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு, மந்தநிலை குறைகிறது. உடல் எடை இயற்கையாக சமநிலைப்படுகிறது. மருந்துகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. வமன பஞ்சகர்மா சிகிச்சை அனை வருக்கும் பொருத்தமானது அல்ல. எனவே, அனுபவம் வாய்ந்த ஆயுர் வேத மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டு ம்.

டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899sreehareeyam.co.in






      Dinamalar
      Follow us