உடம்பை பிட் ஆக வைக்க... முத்கர் சுத்தலாம் வாங்க ப்ரோ!
உடம்பை பிட் ஆக வைக்க... முத்கர் சுத்தலாம் வாங்க ப்ரோ!
PUBLISHED ON : ஜூன் 21, 2026

பழமையான இந்திய உடற்பயிற்சி முறைகளில் ஒன்றான முத்கர் ஃபிட்னஸ் (Mudgar Fitness) , தற்போது கோவை இளைஞர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மல்யுத்த வீரர்கள், போர்வீரர்கள் பயன்படுத்திய கருவியே முத்கர். அன்றைய கர்லா கட்டையின் நவீன முகம். ஆனால் முத்கரை பெண்கள், வயோதிகர்கள் என அனைவரும் தக்க பயிற்சியாளர் இருந்தால் பயன்படுத்தலாம்.
மரத்தால் செய்யப்பட்ட முத்கரை, பல்வேறு கோணங்களில் சுழற்றி செய்யப்படும் பயிற்சி, உடலை மூன்று பரிமாணங்களில் செயல்பட வைக்கிறது.
இதனால் தோள்பட்டை, கை, முதுகு, உடலின் மையத் தசைகள் (Core Muscles) மற்றும் மூட்டுகளின் இயக்கத்திறன் மேம்படுகிறது.
ஒரு தசையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், முழு உடலையும் ஒரே நேரத்தில் இயக்கும் Functional Fitness முறையாக இன்று இது பார்க்கப்படுகிறது.
உடல் உறுப்புகளை அசைக்கும் பயிற்சி, மறு சீரமைப்பு, காயம் தடுப்பு பயிற்சிகளிலும் முத்கர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் அனைத்து வயதினரிடமும் இதற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது என்கின்றனர், ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் ரமீஸ் மற்றும் பார்த்திபன்.
