sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஹெல்மெட்டை கட்டாயமாக்க சொன்னது நாங்கள் தான்!

/

ஹெல்மெட்டை கட்டாயமாக்க சொன்னது நாங்கள் தான்!

ஹெல்மெட்டை கட்டாயமாக்க சொன்னது நாங்கள் தான்!

ஹெல்மெட்டை கட்டாயமாக்க சொன்னது நாங்கள் தான்!


PUBLISHED ON : செப் 28, 2025

Google News

PUBLISHED ON : செப் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் அடிபட்டு முகத்தில் எலும்பு முறிவு எற்பட்டாலும் பொதுவாக எலும்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம்.

ஆனால்,கீழ் தாடையில் இருந்து புருவங்களின் மேல் வரையில் முகத்தில் எந்த பகுதியில் எலும்பு முறிவு எற்பட்டாலும் சரி செய்யக் கூடிய நிபுணத்துவம் பெற்றவர்கள், வாய் மற்றும் முகச் சீரமைப்புத் துறை டாக்டர்கள் மட்டுமே.

கண்ணுக்கு கீழ் உள்ள சைகோமா எலும்பு, மேல் தாடை -மேக்சில்லா, கீழ் தாடை -மேன்டிபுல் எலும்பு என்று முகத்தில் உள்ள 14 எலும்புகளில் எதில் முறிவு எற்பட்டாலும் இத்துறை டாக்டர்களிடம் தான் சிகிச்சை பெற வேண்டும்.

முகம் முக்கியம் - ஏன்?

உடம்பில் மிக முக்கியமான பாகம் முகம். மற்ற உறுப்புகளில் அடிபட்டால் பழைய நிலையில் இயல்பாக செயல்பட வைத்தால் போதும். வெளிப்புறத் தோற்றம் முன்பைப் போல இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் முகத்தை அப்படி தழும்புகளோடு விட முடியாது. பழைய நிலைக்கு முக எலும்பை கொண்டு வருவதோடு, அடிபட்ட தழும்பு வெளியில் தெரியாதபடி முகத் தோற்றம் இருக்க வேண்டும்.

இதுதவிர முகத்தில் அடிபடும் போது எலும்பு முறிவு ஏற்படுத்திய பாதிப்பால், சாப்பிடுவது, கடிப்பது, பேசுவது சிரமம். இதை சரி செய்து நன்கு சாப்பிட, பேச, கடிக்க வைக்க வேண்டியதும் முக்கியம். சிரிக்க வைத்து, தன்னம்பிக்கையை மீண்டும் தர வேண்டும். முகத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவை எப்படிச் சரி செய்தால் தழும்பு வராது என்று வாய், முகச்சீரமைப்பு துறை நிபுணருக்குத் தெரியும்.

பொதுவாக வாய் வழியாக அறுவை சிகிச்சை செய்வதால், முகத்தில் தழும்பு வராமல் பார்த்துக் கொள்வோம்.

இது தவிர, மைனர் ஓரல் சர்ஜரி, மேஜர் ஓரல் சர்ஜரி என்று இரண்டு உள்ளது.

மைனர் ஓரல் சர்ஜரி

பிரச்னை உள்ள மற்ற பற்களை எளிதாக பல் டாக்டரால் எடுக்க முடியும். ஆனால், விஸ்டம் டூத் எனப்படும் கடவாய் பற்களை, வாய், முகச் சீரமைப்பு நிபுணர் தான் அகற்ற முடியும். சிலருக்கு பல் எடுத்த பின் தண்ணீர் குடித்தால் மூக்கு வழியாக வரும். இதையும் நாங்கள் தான் சரி செய்ய முடியும்.

பல் செட் பொருத்து வதற்கு வசதியாக மேல், கீழ் தாடையை சரி செய்து தருகிறோம்.சில குழந்தைகளுக்கு அடி நாக்கை அசைக்க முடியாது. கீழ் தாடையுடன் சேர்ந்து இருக்கும்.

இதனால் பேச்சு வராது. சிலருக்கு வாயில் சிறிய நீர்கட்டிகள் வரலாம். கேன்சரை உறுதி செய்ய பயாப்சி எடுப்பது போன்றவை மைனர் ஓரல் சர்ஜரி.

மேஜர் ஓரல் சர்ஜரி

விபத்து எற்படும்போது அடிபடுவது முகத் தாடை எலும்பு. புள்ளி விபரங்களை பார்த்தாலே இது தெரியும். இந்த விபரங்களை அரசுக்கு தந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கச் சொன்னோம். அதன்பின் முகத்தில் அடிபடுவது வெகுவாகக் குறைந்துள்ளது. அன்னப்பிளவை -cleft palate. தாடைகள் வளராமல் போவது, தாடை முன்பக்கம் நீள்வது, உட்பட பிறவியிலேயே எற்படும் பிரச்னைகள், வாய் கேன்சர் - Oral cancer இவற்றிற்க்கு, அறுவை சிகிச்சைக்குப் பின் முகத்தை பழைய நிலைக்கு சீர் செய்வதும் இத்துறை டாக்டர்கள் தான். பல் இல்லாதவர்களுக்கு டென்டல் இம்ப்பிளான்ட் செய்வது, கோணலான மூக்கை சீரமைப்போம்.

வயதானால் கால் மூட்டுகள் வலிப்பது போன்று கீழ் தாடை மூட்டிலும் வலி வரும். இதன் அறிகுறி தலைவலியாக வெளிப்படும்.

கீழ் தாடை பிரச்னை என்பது தெரியாமல், எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட பல பரிசோதனைகளை செய்வர். தாடையில் பாதிப்பு இருப்பது கடைசியாக தெரியும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும்.

இந்த துறையின் சிறப்பே முகத்தை சீரமைத்து சிரிப்பை கொண்டு வருவது தான்.

டாக்டர் எஸ்.பி. சேதுராஜன், வாய், முக சீரமைப்பு சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை 044 26151514, 99403 94979sethu.omfs@gmail.com






      Dinamalar
      Follow us