தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உண்ணிப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

உண்ணிப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

உண்ணிப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சிக்கர் மைட்' என்ற உண்ணிப் பூச்சி கடிக்கும் போது, கொசு, எறும்பு கடித்தால், 'சுருக்'கென்ற வலியை உணர்வோமே... அந்த அளவுக்கு கூட அரிப்போ, வலியோ உணர முடியாது; ஒட்டுண்ணி கடிப்பதே தெரியாது. ஆனால், ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு, கடித்த இடத்தில் கருப்பு நிறத்தில் சிகரெட்டால் சுட்டதை போன்ற நீள் வட்டத்தில் புண் உருவாகும். இதற்கு, 'எஸ்கார மார்க்' என்று பெயர்.

இந்த புண் தான் உண்ணி தொற்று ஏற்பட்டதற்கான பிரதான அறிகுறி.

உண்ணி கடித்தாலே உண்ணிக் காய்ச்சல் வந்து விடும் என்பதில்லை; இந்த உண்ணியின் உடலில் பாக்டீரியா தொற்று பாதித்துஇருந்து, அந்த உண்ணி நம்மை கடித்து, நம் உடலில் பாக்டீரியா புகுந்தால், நமக்கு உண்ணி காய்ச்சல் வரலாம்.

எஸ்கார் புண், தொடைகளுக்கு இடையில், அக்குள், மார்பு, வயிறு என்று வெளியில் தெரியாத இடங்களில் தான் வரும். இதனுடைய அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் அறிகுறியைப் போன்று, வெள்ளை அணுக்கள் குறைவது, தட்டணுக்கள் குறைவது, உள் உறுப்புகளில் ரத்தக் கசிவு என்று இருக்கும்.

இதை உறுதி செய்வது தான் சிரமம்; சிகிச்சை மிகவும் எளிது. பூச்சி கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலோ, தோலில் அதற்கான அடையாளம் தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் வர வேண்டும்.

டாக்சிசைக்ளின், அரித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிட்டாலே போதும். பெயரை சொல்லிவிட்டேன் என்பதற்காக டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகளை சாப்பிடக் கூடாது. அது மிகவும் ஆபத்தாக முடியலாம்.

எப்படி தடுப்பது?

குழந்தைகளை புல் செடிகள் அடர்ந்த பூங்காக்களில் விளையாட அனுமதிக்கும் போது, உடல் முழுதும் மறைக்கக் கூடிய வெள்ளை, இள மஞ்சள், ஊதா என்று வெளிர்நிற ஆடைகளை அணிவித்து அனுப்ப வேண்டும். காரணம் இந்த உண்ணிப் பூச்சி மிகச்சிறியதாக அடர் பிரவுன் கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும்; வெளிர்நிறத்தில் எளிதாக அடையாளம் காணலாம். வீட்டைச் சுற்றி புல், புதர் மண்டியிருந்தால் அதை வெட்டி சுத்தம் செய்வது அவசியம்.

புல் தரையில் நேரடியாக அமரக்கூடாது. செல்லப் பிராணிகளின் உடலில் உண்ணிப் பூச்சி இருக்கும் என்பதால், அவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இது ஒன்றும் புதிதாக வரும் காய்ச்சல் இல்லை; ஒவ்வொரு ஆண்டும் நிறைய நோயாளிகளை நான் பார்க்கிறேன். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சுலபமாக குணப்படுத்தலாம். தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.



டாக்டர் ச.கார்த்திக் அண்ணாமலை, குழந்தைகள் நல மருத்துவர், கோவை.0422 - 4216 016, 76048 25790cchcbe1@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us