தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடல் ஆரோக்கியத்தை அறிய மொபைல் செயலிகளை நம்பும் பெண்கள்!

உடல் ஆரோக்கியத்தை அறிய மொபைல் செயலிகளை நம்பும் பெண்கள்!

உடல் ஆரோக்கியத்தை அறிய மொபைல் செயலிகளை நம்பும் பெண்கள்!


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்றாட தேவைகள் அனைத்திற்கும் மொபைல் செயலிகளை சார்ந்திருக்கும் இன்றைய சூழலில், கருத்தரிக்க முயற்சிக்கும், கர்ப்பத்தைத் தவிர்க்க, மாதவிடாய் சுழற்சிகளை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள விரும்பும் பெண்கள், 'கருவுறுதல் கண்காணிப்பு செயலி'களை அதிகம் உபயோகிக்க தொடங்கி விட்டனர்.

இந்த மொபைல் செயலிகள், பெண்களின் மாதவிடாய் சுழற்சி, அதன் கால அளவை கண்காணிப்பதன் மூலம், கருவுறுதலுக்கு உகந்த நாட்களைக் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

மாதவிடாயின் தன்மை, ஹார் மோன் செயல்பாடுகள் உட்பட உடலில் நடக்கும் மாற்றங்களை கணித்து சொல்வதால், கர்ப்பம் தரிக்கலாமா, வேண்டாமா, தள்ளிப் போடலாமா என, முடிவு செய்வது சரியாக இருக்கும் என்று நம்புகின்றனர்; ஆனால், உண்மை அதுவல்ல.

ஒவ்வொரு முறையும் 28 நாட்களில் மாதவிடாய் சுழற்சி இருந்தால், மாதவிடாய் வந்த தேதியில் இருந்து, 14வது நாள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். இதை செயலி நினைவுபடுத்தும்.

எனவே, உடல் மற்றும் மன ரீதியாக எந்த பிரச்னையும் இல்லாத தம்பதி, திருமணம் ஆகி, முதல் ஒரு வருடம் வேண்டுமானால், செயலிகளை பயன்படுத்தலாம்.

செயலிகளால் கணிக்க முடியாத சிக்கல்கள்...

மன அழுத்தம், வைரஸ் நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மாதவிடாய் சுழற்சி மாறலாம். பைப்ராய்டு, கருப்பை பாலிப், அடினோமயோசிஸ், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை தொடர்பான கோளாறுகள் இருக்கலாம்.

கருக்குழாய்களில் அடைப்பு, தொற்று ஏற்பட்டிருந்தாலும் கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படலாம்.

விந்து எண்ணிக்கை, விந்துவின் இயக்கம், விந்துவின் உரு வமைப்பில் மாற்றம் இருந்தால், அதுவும் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

கருவுறுதலைக் கண்காணிக்கும் செயலிகளால், இவற்றை எல் லாம் கண்டறிய முடியாது.

இதனால், கர்ப்பம் தரிப்பதில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டு, அது மன அழுத்தமாக மாறலாம்; தாம்பத்திய உறவில், சிக்கல்கள் ஏற்படலாம்.

35 வயதிற்கு குறைவான பெண், ஒரு வருடமாக முயற்சித்து கருத்தரிக்காமல் போவது; 40 வயதிற்கு மேல் உடல் கோளாறுகள் உள்ள தம்பதி, கருக்குழாய் நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமல் இருப்பது, மாதவிடாயின் போது வலி, உடலுறவின் போது வலி, பச்சை தயிர் போன்ற வெள்ளை நிற திரவம் வடிவது, குடலிறக்கம், ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்தவர்கள், இரண்டு முறைக்கு மேல் கருச்சிதைவு ஆனவர்கள், கேன்சர் பாதிப்பு, விந்தணுக் களின் எண்ணிக்கை, இயக்கம், விந்தணுக்களின் உருவ அமைப்பில் மாற்றங்கள் இருந்தால், நேரடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.



டாக்டர் ரம்யா பிரவீன் சந்தர், ஆலோசகர், இனப்பெருக்க மருத்துவம் மற்றும் ஐ.வி.எப்., நிபுணர், காவேரி மருத்துவமனை, சென்னை. 044 - 41611 16111info@kauveryhospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us