ஓய்வுக்கு பிறகும் உற்சாகமாக புதிய தொழில் துவங்கலாமே!
ஓய்வுக்கு பிறகும் உற்சாகமாக புதிய தொழில் துவங்கலாமே!
PUBLISHED ON : செப் 06, 2026

பணி ஓய்வுக்கு பிறகு சொந்தமாக தொழில் துவங்குவதாக முடிவெடுத்தால், உங்களுக்கு என்ன தெரியும், என்ன பிடிக்கும், ஒரு நாளில் எவ்வளவு நேரம் செலவிட முடியும், எவ்வளவு வரை முதலீடு செய்ய முடியும், உதவ குடும்பத்தினர், நண்பர்கள் என யாராவது இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கு பதில் இருக்க வேண்டும்.
* சமையலில் ஆர்வமுள்ளோர், வீட்டு தயாரிப்புகள், தின்பண்டங்கள் செய்து, சிறிய அளவில் அறிமுகமானவர்கள், நண்பர்களுக்கு கொடுக்கலாம். அவர்களின் ரெஸ்பான்ஸ் பொறுத்து, உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்று தொழில் துவங்கலாம்.
* தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் கீரை, காய்கறி நாற்றுகள், அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்யலாம்.
* தமிழ், கணக்கு, இசை, கைவினை, மொழி, தொழில்துறைத் திறன் என தங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தைத் தேர்வு செய்து, ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம்.
* தையல், பின்னல், ஓவியம், மர வேலை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற திறமைகள் இருந்தால், அவற்றை பொருளாக மாற்றி, ஆன்லைனில் விற்கலாம்.
* ஓய்வுக்குப் பிறகு கிடைத்த சேமிப்பை மொத்தமாக தொழிலில் முதலீடு செய்ய கூடாது. முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள்.
* ஓய்வுக்காலத்தில் தொழில் தொடங்குவதன் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. உங்களின் அனுபவம் இன்னும் பயன்படுகிறது என்ற உணர்வு, புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, தினசரி வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் என உற்சாகமான சூழலை ஏற்படுத்தி தரும். ஓய்வுக்காலம் என்பது முடங்கி கிடப்பதற்காக அல்ல; உங்களுக்கு பிடித்த விதத்தில் வாழ்க்கையை மீண்டும் வடிவமைப்பதற்கான வாய்ப்பு. ஆல் தி பெஸ்ட்!
