PUBLISHED ON : டிச 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. குதிரைக்கு ஏன் இசை பிடிக்கும்?
இசை கேட்கும்போது குதிரையின் மன அழுத்தம் குறைவதால்.
2. குதிரையின் ஆதர்ச இசைப்பிரிவு?
மேற்கத்திய நாட்டுப்புற இசை, ஜாஸ், ஹிப்ஹாப்.
3. எந்த ரகக் குதிரைகளுக்கு இசை தெரபி பயன்படுகிறது?
பயிற்சி பெற்ற பந்தயக் குதிரைகள்.
4. குதிரையின் மருத்துவ சிகிச்சையில் இசையின் பங்கு?
குதிரைக்கு அறுவை சிகிச்சை, மருத்துவம் செய்யும்போது அது அமைதியாக அசையாமல் இருக்க இசை உதவுகிறது.
5. குதிரை இசையை ரசிக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
குதிரை தன் வாலை ஆட்டுவது, காது மடல்களை உயர்த்துவது, தாளத்துக்கு ஏற்ப கால்களை அசைப்பது உள்ளிட்ட செய்கைகள்.
6. குதிரை இசை கேட்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்?
குதிரை ஓடும் வேகம் அதிகரிக்க இசை உதவுகிறது.

