
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வாழ்நாள் சாதனைகள் படைத்தோருக்கு, மத்திய அரசு வழங்கும், 'விஞ்ஞான் ரத்னா' விருது, இந்த ஆண்டு யாருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது?
அ. அசோக் மாலிகர்
ஆ. தேவ் சின்ஹா
இ. ஜெயந்த் நார்லிகர்
ஈ. விஜய் ரூபாக்கர்
2. இந்திய எல்லையான, லடாக்கை ஒட்டிய திபெத் பகுதியில், எந்த அண்டை நாடு ராணுவ விமான இயங்கு தளத்தைக் கட்டி வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது?
அ. ஆப்கானிஸ்தான்
ஆ. சீனா
இ. பாகிஸ்தான்
ஈ. இலங்கை
3. தென் மாவட்டங்களில், ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை விரைவாகக் கையாள, நவீன கட்டமைப்புகளுடன் கூடிய பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை எந்த இடத்தில், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது?
அ. தூத்துக்குடி
ஆ. திருநெல்வேலி
இ. கன்னியாகுமரி
ஈ. தென்காசி
4. சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான யாரின் 150வது பிறந்தநாளை யொட்டி (அக். 31), நவம்பர் 15ஆம் தேதி வரை, தேசிய விழாவாகக் கொண்டாடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது?
அ.சுபாஷ் சந்திரபோஸ்
ஆ. சர்தார் வல்லபபாய் படேல்
இ. சரோஜினி நாயுடு
ஈ. ராணி லட்சுமிபாய்
5. உச்ச நீதிமன்றத்தின், 53வது தலைமை நீதிபதியாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. சந்திரசூட்
ஆ. சஞ்சீவ்
இ. லலித்
ஈ. சூர்யகாந்த்
6. தெற்காசிய கூட்டமைப்பு சார்பில், ஜார்க்கண்டில் நடந்த சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்?
அ. சதீஷ் சிவன்
ஆ. கார்த்திக் கிஷோர்
இ. பிரின்ஸ் குமார்
ஈ. நித்தியானந்தம்
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஆ, 5. ஈ, 6. இ.

